பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


ன்னைத் தன் பணியாளனாகப் பார்ப்பதில்லை இறைவன். யாவருக்கும் பணிபுரியும் தன்னையே என்னில் காண்கிறான் அவன்.

- மின்

ன் கனவுகள் யாவற்றிலும் அசைந்தாடும் அவளுடைய கூந்தலின் நறுமணத்தையே உணர்கிறேன்.

-கா.ப

வாழ்க்கைப் பாதையில் நடைபோட நமக்குத் துணை புரிவது தன்னுணர்வு என்கிற ஒளியே.

-எ.எ

றிவைத் தேடி அலைபவர்களும் உள்ளனர்; செல்வத்தைத் தேடி அலைபவர்களும் உள்ளனர். நான் பாட விரும்புகிறேன். ஆகவே உன் துணையை நாடுகிறேன்.

-மின்

னக்கே உரிய மலர்களை மனிதனின் கைகளிலிருந்தே பரிசாகப் பெறவே இறைவன் காத்திருக்கிறான்.

-ப.ப

ரிக்கரையிலே வரிசையாக நிற்கும் தென்னை மரங்கள், தலைவிரித்தாடி இருண்ட வானை மோதி அறைகின்றன. மழையில் நனைந்து அலங்கோலமாய் இருக்கும் சிறகுகளுடன், காகங்கள் புளிய மரக்கிளைகளிலே மெளனமாக வீற்றிருக்கின்றன. ஆற்றின் கீழைக் கரையிலே இருள் இருண்டு வருகின்றன.

-ப.ப