பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

87



கோடை காலம்

அன்பே, என் கண்களில் உன்னை மறைத்து வைத்துக்கொள்வேன்.

என் மகிழ்ச்சியில் ஒரு மாணிக்கம் போல் உன்னை இழையிட்டுக் கொண்டு என் மார்பில் உன்னை மாட்டி வைத்துக் கொள்வேன்.

நான் குழந்தையாகயிருந்த காலத்திலிருந்தே என் நெஞ்சத்தில் நீ குடி புகுந்துள்ளாய்.

என் இளமைக் காலத்திலிருந்தே, என் வாழ்க்கை முழுவதிலுமே, என் கனவுகளிலும் கூட, நீ என்னுடனேயே வாசம் செய்கிறாய் உறங்கும் பொழுதும் விழித்திருக்கும் பொகுதும் கூட.

-நா