உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


இடர்களிலிருந்து என்னைக் காக்குமாறு, உன்னை வேண்டிக் கொள்ளாமலிருப்பேனாக. மாறாக அச்சமில்லாமல் அவற்றை எதிர் கொள்ளும் ஆற்றலை அளிப்பாயாக.

-க.கொ

அதிகாலையில் என் வீட்டு வாயிலுக்கு வந்தாய், இசை பொழிந்தாய்.

-எ

கண்களை நன்கு விழித்துப் பார்க்கிறேன், புன்னகை புரிகிறேன், எங்கும் அவன் அழகைக் காண்கிறேன்.

-க.பா

அரை குறையாய் விழித்திருக்கிற குழந்தை தன் தாயை மங்கலான அதிகாலை வெளிச்சத்தில் பார்க்கிறது. அது போன்றே நான் உன்னைப் பார்த்திருக்கிறேன். அந்தக் குழந்தை புன்னகை பூக்கிறது, பின்னர் உறக்கத்தில் ஆழ்ந்து விடுகிறது.

-க.பா

இரண்டு உள்ளுயிர்களிடையே நிலவும் முடிவற்ற தூரத்தை இசை நிரப்பிவிடுகிறது.

-க.பா

அமைதியற்ற என் மனத்தை நான் சலனமின்றி செய்து விடுகிறேன், என் உள்ளம் ஒளி வீசுகிறது.

-க.பா