8 இரவும் பகலும் மருத்துவரிடம் சென்ற ஒருவன் வாய்விட்டு, "ஐயோ! வயிற்றை வலிக்கிறதே!" என்று முதலில் கதறுவதுதான் இயல்பு. அப்படிக் கதறினார் இவரும். மருத்துவர் நோயாளியைப் பார்த்து, "வயிற்றை வலிக் கிறதா? நீ என்ன தின்றாய்?" என்று கேட்பார். அதற்கு அவன் விடையிறுப்பான். இங்கே மருள்நீக்கியாரை மருத் துவனாகிய இறைவன் கேள்வி கேட்கவில்லை. அவன் கேட்க வேண்டிய கேள்வி மருள்நீக்கியாருடைய மனத்தில் தானே தோன்றியது. 'ஏன் அப்பா இந்தக் கூற்றுப் போன்ற நோய் வந் தது? நீ என்ன பிழை செய்தாய்?" இந்தக் கேள்வி இறைவன் கேட்காமலே அதற்கு அவர் விடையளிக்கிறார். நான் எத்தனையோ கொடுமைகளைச் கேட்டது. செய்திருக் கிறேன். அவற்றை நான் செய்யும்போது அவை இப்படி வந்து விளையுமென்று அறியவில்லை" என்கிறார். கொடுமைபல செய்தன; நான் அறியேன். "ஏன் அப்பா, நீ தின்னக் கூடாததைத் தின்றாயோ?" என்று மருத்துவர் கேட்கிறார். "ஆம்; என்ன என்னவோ தின்றேன் ஐயா; அப்போ தெல்லாம் இப்படி வருமென்று எனக்குத் தெரியவில்லை. அறியாமல் செய்துவிட்டேன். இப்போது படுகிறேன்" என்று நோயாளி சொல்கிறான் இதே நிலையில்தான் மருள்நீக்கியாரும் பேசுகிறார். “நான் பண்ணின கொடுமைகள் பல. அறியாமல் அவற்றைச் செய்துவிட்டேன். நீ இப்போது என்னை உன் னுடைய திருவடித் தொண்டனாக ஏற்றுக் கொண்டு விட் டாய். உன் திருவடியையே நான் பற்றிக்கொண்டேன்.
பக்கம்:இரவும் பகலும்.pdf/17
Appearance