10 இரவும் பகலும் புகுந்துகொண்டு அது படுத்துகிற பாடு சொல்லி முடியாது. என் குடலோடு பிணைந்து சுருட்டுகிறது; என்னை முடங்கும் படி செய்கிறது. அது அப்படிச் செய்யச் செய்ய என்னால் ஆற்ற முடியவில்லை அப்பனே!" என்று கூவுகிறார். தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடி யேன் அதி கைக்கெடில வீரட்டானத்துறை அம்மானே. திருவதிகை என்னும் தலம் கெடில நதிக்கரையில் அமைந்திருக்கிறது. அதியமான் என்பது சேர மன்னர் குலத்தைச் சார்ந்த குடி ஒன்றிற் பிறந்தாருடைய பட்டப் பெயர்; அதிகமான் என்றும் அப்பெயர் வழங்கும். ஒளவையாருக்கு நெல்லிக்கனி வழங்கிய அதிகமான் நெடுமான் அஞ்சி அந்தக் குலத்தில் உதித்தவன். அக்குலத் தில் உள்ளவர்களை அதிராஜர் என்று வடமொழியிலும் அதியரையர் என்று தமிழிலும் வழங்குவர். அக்குலத்தில் உதித்த ஒரு மன்னன் இத்தலத்திலுள்ள திருக்கோயிலைக் கட்டியமையீன் அதியரையமங்கலம் அல்லது அதியரைய மங்கை என்ற திருப்பெயர் இதற்கு அமைந்தது. அதுவே மருவி அதிகை என்று ஆயிற்று. பது இறைவனுடைய வீரச் செயல்களை நினைக்கச் செய்யும் தலங்கள் எட்டு, தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றை அட்டவீரட்டம் என்று கூறுவர். வீர ஸ்தானம் என்ப வீரட்டானம் என்று தமிழில் திரிந்து, பின்பு வீரட்டம் என்றும் மாறியது. திருவதிகையில் இறைவன் திரிபுரம் எரித்த வீர விளையாட்டைப் புலப்படுத்தினானாதலின் இது வும் வீரட்டத்திற் சேர்ந்ததாயிற்று. திருவதிகை வீரட்டம் என்று இதன் பெயர் வழங்கும். கெடில ஆற்றின் கரையில் இருப்பதால் திருவதிகைக் கெடில வீரட்டானம் என்று
பக்கம்:இரவும் பகலும்.pdf/19
Appearance