சொல்வது புலவர் ஆயிரம் பேரான்
15 10:11. ஆகவே இறைவனுக்குப் 64 பலபல கால்கள் உண்டு என்று சொல்வதையே, ஆயிரங் கால்களை உடையவன்" என்று சொல்லலாம். "ஆயிரங் கண்ணினன், ஆயிரம் சேவடியான்" என்று வேதமும் பேசுகிறது.+ திருநாவுக்கரசர் இறைவன் தன் அருளினால் கொள்ளும் திருமேனி நலங்களை எண்ணிப் பார்க்கிறார். நமக்கு இரண்டே கால்கள் உள்ளன. ஒரு சமயத்தில் ஓரிடத் துக்குப் போக உதவுகின்றன. நமக்குக் கால்கள் இருந்தும் நாம் நினைத்தபடி நினைத்த இடத்துக்குப் பல சமயங்களில் போக முடியவில்லை. இறைவன் திருவுள்ளங் கொண்டா னானால் ஒருகணத்தே எதையும் செய்ய வல்லவன். எத்தனை அடியார்களுடைய உள்ளத்தில் அவன் எழுந்தருளி யிருக் கிறான்! ஒரே சமயத்தில் அத்தனை இடங்களில் எழுந்தருளு வதற்கு அவனுக்கு எத்தனை திருவடிகள் இருக்க வேண்டும்! ஒரு திருவுருவத்தில் மற்ற அங்கங்கள் பலவாக இருப்ப துண்டு; அடிகள் மாத்திரம் இரண்டுதான் இருக்கும். இராவணனுக்குப் பத்துத் தலை, இருபது கைகள்; ஆனால் ரண்டே கால்கள். இந்த வரையறைகூட இறைவனுக்கு இல்லை. அவன் திருமேனிகள் பல ; திருவடிகளும் பல. இது யாரிடத்தும் காணாத வியப்பு அல்லவா? அதை முதலில் திருநாவுக்கரசர் சொல்கிறார். ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடி யானும்.
- " ஒருநாள எழுநாளபோற செலலும் (1269) என்னும்
குறள உறையில் பரிமேலழகர், 'ஏழென்பது அதற்கு மேலாய மிக்க பன்மை குறித்து நின்றது' என்று எழுதியதையும், "சங்கமளிப் பன ரத்னவிதஞ்சத கோடியே" (தக்கயாகப்பரணி, 73) என்பதன் உரையில் உரையாசிரியர், 'சதமென்பது அந்தவாசி' என்று எழுதியதையும் காண்க. புருஷசூக்தம்.