உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 இரவும் பகலும் களால் அலைக்கப்படும் நாற்ற உடலம். இறைவனோ திவ்ய மங்கள விக்கிரகங்களை உடையவன். அவன் நம்மைப்போலத் திருமேனியுடையவனாக இருந் தாலும் அவன் திருமேனியின் ஒவ்வோர் உறுப்பும் ஒவ் வொரு தத்துவத்தைக் குறிப்பதாக அமையும். நமக்குத் தலையுண்டு ; இறைவனும் தலையுடையவனாக அடியார் களுக்குக் காட்சி கொடுக்கிறான். நம் தலை முடைத்தலை ; அவன் திருமுடியோ சந்திரனும் கங்கையும் நிலவும் சடை. இப்படியே வேறுபாடுகளைக் காணலாம். அவனுக்குச் சரீரம் இயற்கையானது என்றால் ஒரு சமயத்தில் ஒரு திருமேனியை உடையவனாக இருப்பான். அது அவனுக்கு இயற்கையன்றாதலின் ஒரே சமயத்தில் பல சரீரமுடையவனாகவும் தோன்ற முடிகிறது. ஒரே சரீரத்தில் பலபல உறுப்புகளை உடையவனாகவும் அவன் தோன்றுகிறான். மனிதனுக்கு இரண்டு கால்களே உண்டு : விலங்கினங் களுக்கு நாலு கால்கள் இருக்கின்றன ; சில பூச்சிகளுக்குப் பல கால்கள் உள்ளன. இறைவனுக்கு இத்தனை கால்கள் என்ற வரையறையுண்டா? இல்லை. அவன் எத்தனையோ கால்களை உடையவன். கணக்குக்கு அடங்காத கால்கள் அவனுக்கு உண்டு. சில சமயங்களில் கணக்கிட முடியாமல் இருக்கும் பொருளையும் ஒரு கணக்குக்கு உட்பட்டதுபோல் ஆயிரம் என்று சொல்வது ஒரு வழக்கு. அப்படிச் சொல் வதனால் திட்டமாக ஆயிரம் என்று வரையறையாகக் கொள்ளக்கூடாது. "கூட்டத்துக்கு ஆயிரம் பேர் வந்திருந் தார்கள் என்று சொன்னால் சரியானபடி கணக்கிட்டு ஆயிரமென்று தெளிந்து சொன்னதாகக் கொள்வோமா? பல பேர் என்பதையே ஆயிரம் என்று சொல்கிறார்கள். இப்படி வரும் எண்ணிக்கையை அநந்த வாசி என்று 1 þ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/23&oldid=1726762" இலிருந்து மீள்விக்கப்பட்டது