உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரம் பேரான் தனக்கென்று உருவம் இல்லாதவன் இறைவன். ஆனாலும் அடியார்களுடைய தவத்துக்கும் அன்புக்கும் இரங்கி அவர்களுடைய கண்ணுக்கும் கருத்துக்கும் புலப் படும் திருவுருவங்களோடு எழுந்தருளும் ஆற்றல் அவனுக்கு உண்டு. நாமும் உருவத்தோடு வாழகிறோம்; வேறு வேறு உருவங்களை எடுக்கிறோம் அப்படி வேறு உருவத்தை எடுக்கும் செயலையே பிறப்பு என்கிறோம். இறைவனும் வேறு வேறு திருவுருவங்களை எடுத்து அன்பர்களுக்கு அருளினானென்று புராணங்கள் சொல்கின்றன. அப்படி யானால் நாமும் அவனும் ஒரே நிலையில் இருப்பவர்கள் தாமா? . இருவரும் பல வேறு உருவங்கள் எடுப்பது உண்மையே என்றாலும் வேறுபாடு உண்டு. நாம் எடுக்கும் உருவங்கள் நம்முடைய வினைக்கு ஈடாய் இறைவனால் நமக்கு வரையறுத்து வழங்கப்படுவன. இறைவன் எடுக்கும் உருவங்கள் அருளின் வயப்பட்டுத் தானே மேற்கொள் டாவை. இறைவனுடைய ஆணையின்படி அமைபவை நம் முடைய பிறவிகள். நாம் விரும்பும் இயல்போடு, நாம் விரும்பும் காலத்தில் நமக்கு உடலம் அமைவதில்லை. அப் படியானால் ஒவ்வொருவரும் பேராற்றலும் பேரழகும் தீர்க் காயுளும் உடையவராக இருப்போம். உறுப்புக் குறையே உலகில் இராது. நம் பிறப்பு நம் கையில் இல்லை. இறை வனோ சுதந்தரமுடையவனாதலின் ஏதேனும் ஒரு காரணத் தினால் தானே விரும்பி மேற்கொள்ளும் திருவுருவத்தோடு வந்து அருள் செய்கிறான். நம்முடைய உடம்பு ஐம்பொறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/22&oldid=1726761" இலிருந்து மீள்விக்கப்பட்டது