12 இரவும் பகலும் முடங்கிக் கிடக்கும்படி இது செய்யாநிற்க, இததகைய நோயை அடியேன் பொறுக்கமாட்டேன். இதனை நீ தீர்த்தருள வேண்டும். விலக் கூற்று-யமன். ஆயினவாறு - ஆனவண்ணத்தை ககலீர் - விலக்கீர். செய்தன கொடுமை பல. அடிக்கு ஏற்றாய்; என்றது திருவடி சம்பந்தமுடையதைச் சொன்னபடி; அடிபைச் சார்வதனால்தான் அடியார் என்ற பெயர் அன்பர்களுக்கு அறைந்தது. இதுகாறும் வெறும் நினைப்பளவிலே இருந்த நிலை மாறி இனி இரவும் பகலும் வணங்கும் செயலை மேற்கொள்வேன் என்றார். அகம்படி - உள்ளிடம். துடக்கி - பிணைத்து; கோத்துக் கொண்டு. முடக்கியிட - முடக்க; முடங்கச் செய்ய. அம்மான் தலைவன்.) அந்த விடியற்காலையில் மருள்நீக்கியாருடைய வேத னைக்கும் விடிவுகாலம் நேர்ந்தது. அதற்குமுன் இரவும் பகலும் மாறி மாறி வந்தாலும் அவருக்கு இருளாகவே இருந்தன. அதற்குப் பின் இரவும் பகலும் பிரியாது வணங்கும் நெறியிலே ஈடுபட்டமையால் அவருக்கு ஒளி மிகுந்த பகலே எப்போதும் உளதாயிற்று. தளர்ச்சியாகிய இரவும் கிளர்ச்சியாகிய பகலும் மாறி, "இன்பமே எந் நாளும், துன்பமில்லை" என்ற நிலை கிடைத்தது. அத்தகைய ஒளி நிறைந்த வாழ்க்கைக்கு இன்று விடியல் நேரம். அந்த விடியற்காலையில் உதயமான குரல்தான், 'கூற்றாயினவாறு எனத் தொடங்கிய திருப்பதிகம். "நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன் என்று இவர் அடுத்த பாட்டில் கூறுவது காண்க.
பக்கம்:இரவும் பகலும்.pdf/21
Appearance