ஆயிரம் பேரான்
17
என்பது ஆசை. ஆனால் அப்படிச் சொல்வது இயலுங்காரியமா? அடி,நடு, முடி என்ற மூன்று பகுதிகளைப் பற்றிச் சொன்னாலே ஒருவாறு முற்றும் போன்ற நிலை உண்டாகும். இங்கும் இறைவனுடைய திருக்கோல விரிவைச் சொல்ல வரும் வாகீசர் முதலில் அடியைச் சொன்னார். பிறகு நடுவேயுள்ள திருக்கரங்களைச் சொல்கிறார்; தோள்கள் பலஎன்கிறார்.
இரண்டு தோள்களோடு நிற்கும் திருக்கோலம் இறைவனுக்கு உண்டு; நான்கு தோள்களோடு எழுந்தருள்வதும்
உண்டு; எண்தோள் வீசி நின்று ஆடுகின்ற நிலையும் உடையவன் அவன்ж; ஐந்துமுகங் கொண்டபோது பத்துத் திண்டோள்களோடு காட்சி தருவான்.† அதற்கு மேலும் தோள்களைக் கொண்டவன் அவன்.
தான் திருவுள்ளத்தில் நினைந்த இடத்துக்குச் செல்லும் உரிமையும் ஆற்றலும் உடையவன் என்பது தோன்ற, "ஆயிரஞ் சேவடியான்" என்று சொன்னார் அப்பர். இறைவன் தான் நினைத்தபடியே செய்யும் ஆற்றலை உடையவன் என்பதையும் புலப்படுத்த அவன் ஆயிரம் தோள்களோடு
விளங்குகிறான் என்கிறார். கையென்பது செயலைக் குறிக்கும் அடையாளம். ஆற்றல் இல்லாதவனைக் கையால் ஆகாதவன் என்றும், செயலைச் செய்பவன், 'ஒரு கை பார்ப்பேன்' என்றும் கூறும் உலக வழக்குகள் இந்த உண்மையை விளக்குகின்றன. இறைவன் பல கரங்களை உடையான் என்பதும் பல செயல்களைச் செய்யும் ஆற்றலுடையவன் என்பதைப் புலப்படுத்துவ தாகும்.
அவன் வண்ணம் பொன்வண்ணம்: அவன் தோள்கள் பொன்மலை போன்றன.
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் தோளுடை யானும்.
★
ж"எண்டோள் வீசிநின் றாடும் பிரான்"
(திருநா.தேவாரம்.)
†"திகழ்த் சக்கரச் செம்முகம் ஐந்துளான்"
(கந்த புராணம்.)
இ-2