18 இனி முடிவைச் இரவும் பகலும் கட சொல்கிறார். எல்லாப் பொருள் களுக்கும் முடிவாக நிற்பது இறைவன் முடி, அவனுடைய இலக்கணங்களை ஆராய்ந்து சொல்பவர்கள் ஓரிடத்தில் நிறுத்துகிறார்கள். அந்த இடமே அவனுடைய முடி என்று கொள்ளலாகும். இதற்குமுன் பல பல சமயத்தினரும் தங் கள் தங்கள் ஆராய்ச்சிக்குத் தட்டுப்பட்ட வகையில் வுள் இலக்கணத்தைக் கூறிச் சென்றார்கள். இப்போதும் கூறி வருகிறார்கள். இனியும் கூறுவார்கள். இறைவனைப் பற்றி அவர்கள் வெவ்வேறாகக் கூறும் இலக்கணங்கள் அவ் வளவும் அவனுக்கு உரியனவே. அவை பலவாக இருக்கின் றன. இதையே அவன் தன் பல திருமுடிகளால் காட்டு கிறான். இறைவனைப்பற்றிய ஆராய்ச்சி முடிபுகள் பலவாக இருக்கின்றன; அவனுடைய திருமுடிகளும் பலவாக உள் ளன. இறைவன் திருமுடி. பிற பொருள்களை விளக்கும் ஞாயிற்றைப்போல ஒளிவிட்டு விளங்குகின்றது. . ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடி யானும். . ள் உலகில் நாம் காணும் எந்தப் பொருளுக்கும் உருவம் இருக்கிறது; பெயரும் இருக்கிறது. பொறிகளாலும் அறி வாலும் உணரப்படும் நிலையையே உருவம் என்று சொல்கி றோம். கண்ணாலே காண்பது உருவம் என்பது பெரும் பான்மை வழக்கானாலும் பொறிகளால் உணரப்படும் நிலை யையும் அப்படிச் சொல்வது உண்டு. காற்றுக்கு உருவம் உண்டு; அது கண்ணாலே காணப்படுவதன்று; மெய்யால் உணரப்படுவது. கண்ணால் காண்பதை வடிவு என்றும் புலன்களால் உணர்வதைப் பொதுவாக உரு என்றும் கூறு வது மரபு. 'அவர் பாடிய பாட்டு நல்ல உருவத்தையுடை யது" என்றால், அந்த ஒலியமைப்பின் நிலையைக் குறிப்பதா கிறது; செவியால் உணரும் ஒலிக்கு உருவம் உண்டென்று அதனால் தெரிகிறது.
பக்கம்:இரவும் பகலும்.pdf/27
Appearance