ஆயிரம் பேரான் 19 பொறிகளால் உணரப்படுவதைக் குணமென்றும் சொல்லலாம். குணமுடைய எதற்கும் ஒரு பெயரும் உண்டு. பெயரைக் குறி என்று சொல்வர். உருவம்,பெயர் என்னும் இரண்டும் பொறிகளால் நுகர் பொருள்களுக்கு உண்டு; நாம ரூபம் என்று சொல்வது வடமொழி வழக்கு. இந்த இரட்டையையே கோலமும் குறியும் என்றும், குணமும் குறியும் என்றும் சொல்லலாம். சொன்ன அப்பர் இறைவனுடைய கோலங்களைச் அவற்றோடு தொடர்புடைய குறிகளைப்பற்றிச் சொல்கிறார். உருவமுடையவனாக இறைவன் எழுந்தருள்வான் என்றால், திருநாமமும் உடையவனாகிறான் என்பது சொல்லாமலே அமையும். குணமிலாக் கடவுள் குணமுடையான் போல வரும்போது குறியும் உடையவ னாகிறான். உருவிலா இறை வன் உருவுடையவனாக எழுந்தருளும்போது பெயரும் உடையவ னாகிறான். பல பல திருக்கோலங்களை உடையவனாகிய இறைவ னுக்குத் திருநாமங்களும் பலவாக அமைந்திருத்தல் வியப் பன்று. அடிகளும் தோள்களும் முடிகளும் பல என்ற கருத்தோடே ஆயிரம் ஆயிரம் என்று சொன்னதுபோலவே, திருநாமங்களும் ஆயிரம் என்று சொல்கிறார் வாகீசர். ஆயிரம் பேர்உகந் தானும். அந்தத் திருநாமங்களை அவன் உகந்து மேற்கொண் டிருக்கிறான். அவன் தானே விரும்பிக் கொள்ளும் திரு மேனியை உடையவன்; அப்படியே தானே உகந்து மேற் கொள்ளும் திருநாமங்களையும் உடையவன். பல திருநாமங்களை உடைய இறைவனுக்கு ஆயிரங் திருநாமங்களை வரையறையாகச் சொல்லி அருச்சித்தல் ஒரு மரபு.ஒவ்வொரு மூர்த்திக்கும் தனித்தனியே சகசிர நாமம் உண்டு. ஒரே மூர்த்திக்குப்பலவேறு சகசிரநாமங்கள்
பக்கம்:இரவும் பகலும்.pdf/28
Appearance