20 இரவும் பகலும் இருக்கின்றன. சில தலங்களில் உள்ள இறைவனுக்குச் சிறப்பாகச் சகசிர நாமங்கள் வழங்குகின்றன. ஒருவாறு அளவிட்டு வழங்கும் இந்தத் திருநாமங்களைக் கூட்டிக் கணக் கிட்டாலே இறைவன் பல்லாயிர நாமங்களை உடையவன் என்பது தெரியவரும். ஆனாலும் ஆயிரம் என்று சொல்வது வழக்காகிவிட்டது. 'பேராயிரமுடைய பெம்மான்" என்று அப்பர் வேறிடத்திலும் கூறுகிறார். தனக்கு எனக் கோலமும் குறியும் இல்லாத இறைவனைக் கோலமும் பெயரும் உடையவனாகக் கொண்டு வழிபடுவதனால் அவ னுக்குப் புதிய பெருமை ஒன்றும் வரப்போவதில்லை; நமக் குத்தான் நன்மை. "ஒருநாமம் ஓருருவம் ஒன்றும் இலார்க் காயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ" என்று மணிவாசகப் பெருமான் பாடுகிறார். ஆயிரம் திருவடிகள் முதலியவற்றை உடைய இறை வன் கோலம் பெருந்திருக்கோலம். அந்தக் கோலத்தை எண்ணிப் பார்ப்பது எளிய செயலன்று. காதாலேயாவது கேட்கட்டும் என்று அப்பர் சொன்னார். கருத்திலே நினைந்து அகக்கண்ணால் காணும் நல்லருளுடையார் சிலர் இருக்கலாம். ஆனால் எல்லோரும் அந்தப் பேறுடையவர் ஆக முடியுமா? ஆயிரம் 'அவன் ஆயிரம் அடியும் ஆயிரம் தோளும் முடியும் ஆயிரம் பேரும் உடையவனாக இருந்தால் எனக்கு என்ன? அவை எனக்கு முன் தோன்றுமா? ஆயிரத்தையும் தரிசிக்க வகை இல்லையெனறால் ஒன்றையாவது காண வகை உண்டா? என்று அப்பரைக் கேட்கலாம். அதற்கு விடை சொல்கிறார். அவர்
பக்கம்:இரவும் பகலும்.pdf/29
Appearance