ஆயிரம் பேரான் 21 குணம் குறி கடந்த இறைவன் குணங்குறி கலந் தவனாக அருளுடையாருக்குத் தோற்றுகிறான். அவர் களுடைய அகக் கண்ணினாலே அந்தத் திருக்கோலத்தைக் காணும்படி காட்சி தருகிறான். அவ்வளவு தூரம் இறங்கி வந்தவன் இன்னும் கீழே இறங்கிவர முடியாதா? ஆயிரம் காலுடையவன் இரண்டு காலுடன் வருவான். ஆயிரம் பேருடையவன் ஒரு திருநாமத்தோடு வருவான். எல்லை யீன்றிப் பரந்திருக்கும் கடலுக்குக் கரையில்லை. ஆனால் அதன் நீரை நம்மிடம் இருக்கும் சிறிய பாத்திரத்தில் கொண்டு வரலாம். கடல் நீர் முழுவதையும் கொண்டுவர இயலாது; ஆனால் நம் பாத்திரம் முழுவதும் நிரம்பி யிருக்கும் வகையிலே கொணரலாம். அப்படியே இறைவ னுடைய கோலங்கள் அத்தனையையும் நாம் உணர முடியாது. நம் ஆற்றலுக்கு ஏற்ற வகையில் எதையேனும் ஒன்றைக் கண்டு மன நிறைவு அடையலாம். இறைவன் நாம் புறக் கண்ணாலே தரிசித்துப் பேறு பெறும்படி திருக் கோயில்களில் விக்கிரக உருவத்தில் எழுந்தருளி இருக் கிறான். ஆயிரம் திருமுடிகள் முதலியவற்றை உடையவனாக இருப்பவன் எவனோ அவனே அந்த உருவத்திலும் இருக் கிறான். அதை நாம் காணலாம். வ தலந்தோறும் எழுந்தருளியிருக்கும் இறைவனுடைய அருள் திருமேனியை அப்பர் காட்ட விழைகிறார். ஒன்று சொன்னால் மற்றவையும் அத்தகையனவே என்று கண்டு கொள்ளலாம் அல்லவா? ஆகவே ஒன்றை உதாரணமாகச் சுட்டிக் காட்டுகிறார்; "முன்னே சொன்ன, பெருந்திருக் கோலமுடையவனே திருவாரூரில் எழுந்தருளியிருக்கிறான். என்று சொல்கிறார். ஆரூர் அமர்ந்த அம்மானே. திருவாரூரில் தியாகராஜப் பெருமான் எழுந்தருளி யிருக்கிறார். அவர் அமர்ந்த திருக்கோலத்தில் விளங்குகிறார். .
பக்கம்:இரவும் பகலும்.pdf/30
Appearance