உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அவர் இரவும் பகலும் நடனம் செய்தாலும் இருந்தபடியே செய்வார். அதனால் அப்பெருமானுக்கு 'இருந்தாடழகர்' என்ற திரு நாமம் வழங்குகிறது. ஆதலின் ஆரூரில் இறைவன் அமர்ந் திருக்கிறான் என்று சொல்கிறார் அப்பர். பக்குவமுடைய வர்கள் காண அவர்கள் நெஞ்சத்தே ஆயிரம் சேவடிகள் முதலியவற்றோடு எழுந்தருளியிருக்கும் இறைவனே,பக்கு வம் இல்லாருக்கும் அருள் செய்ய வேண்டி இப்படி அமர்ந் திருக்கிறான் என்று அவனுடைய கருணையை நினைப்பூட்டு கிறார் இப் பெரியார். ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடி யானும் ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரம் தோளுடை யானும் ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள்முடி யானும் ஆயிரம் பேர்உகந் தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே. [பொன்வரை-பொன்மலை. ஞாயிறு-சூரியன். நீள முடி - உயர்ந்த முடி. எல்லாப் பொருளிலும் உயர்ந்து நிற்றலால் நீள முடியாயிற்று. இறைவனுடைய இலக்கணங்களுக்கு முடிவு காண்போம் என்று புகுவோருக்கு அந்த முடிவே தட்டுப்படுவ தில்லை. அவனுடைய முடியைக் காண்போம் என்பவருக்கும் அது தட்டுப்படாமல் நீண்டு கொண்டே போகிறது. ஆதலின் தட்டுப் படாமல் நீண்டு செல்லும் முடி என்றும் பொருள் கூறலாம். உகந் தான் - விரும்பி மேற்கொண்டவன். அம்மான் - தலைவன்.] திருவாரூர் சோழநாட்டில் காவிரிக்குத் தென் கரை யில் உள்ள தலம். சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றாகவும் கொள்வதுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/31&oldid=1726771" இலிருந்து மீள்விக்கப்பட்டது