எப்போதும் இனியான் தேவர்களுக்கெல்லாம் தலைவனாக இருப்பதனால் இறை வனுக்குத் தேவேசன், தேவாதி தேவன், தேவர்கள் தம்பிரான் என்ற திருநாமங்கள் வழங்குகின்றன. முற் பிறப்பிற் செய்த நல்வினைப் பயன்களை நுகர்பவர்கள் தேவர்கள்; எப்போதும் இன்புற்று வாழ்பவர்கள்.இன்ப உலகமாகிய துறக்கத்தில் வாழும் குடிகள் அவர்கள். துன்பமும் வறுமையும் நோயும் உள்ள மக்களுக்குத் தம்முடைய குறைபாடு தெரியும். அவர்களுக்குள்ளும் செல்வம், கல்வி, ஆற்றல் மிகுதியாகிவிட்டால், 'எனக்கு நிகர் இல்லை' என்ற செருக்கு வந்துவிடுகிறது. இன்ப வாழ் விலே வாழும் அமரர்களுக்குச் செருக்கு உண்டாவதற்குக் கேட்பானேன்? அந்தச் செருக்கை அடக்குவதற்காக அமரர்கள் அனைவருக்கும் சேர்ந்து இன்னல் உண்டாகும் படி இறைவன் திருவுள்ளம் கொள்வான். அப்போது அசுரர்கள் எழுவார்கள்; தேவலோக வாழ்வுக்கு இடையூறு விளைவிப்பார்கள். மனிதனுக்கு வரும் இன்னல் சிறியது. எறும்புக்கு உடம்பிலே காயம் பட்டால் சிறியதாகவே இருக்கும். தேவர்களுக்கு வரும் துன்பம் பெரிதாக இருக்கும். செருக்கிலே ஆழ்ந்திருக்கும் அவர்களுக்கு அத்துன்பத்தைப் போக்கும் ஆற்றல் இல்லை. அப்போதுதான் தமக்கெல்லாம் பாதுகாப்பாக இறைவன் இருக்கிறான் என்ற எண்ணம் உண்டாகும். அவனிடம் ஓடுவார்கள்; காலில் விழுந்து கதறுவார்கள். இறைவன் அவர்களிடம் கருணை கொண்டு அவர்களுடைய இன்னலைப் போக்குவான். இப்படிப் பல முறை நிகழ்ந்ததுண்டு.
பக்கம்:இரவும் பகலும்.pdf/32
Appearance