உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இரவும் பகலும் அநுபவத்தினாலே இறைவனுடைய அருமைப்பாட்டை உணர்ந்தவர்கள் அமரர்கள். அவர்கள் செருக்குற்ற காலத்தில் தாம் தாமே முதல்வர் என்று எண்ணிக்கொண் டிருந்தாலும், அசுரர்களால் அலைக்கப்பெற்று இன்னல் அடைந்தபின் தமக்கெல்லாம் முதல்வன் இறைவன் என்ற உணர்ச்சி அவர்களிடம் உதயமாகியது. இனியும் தம் வாழ்வுக்கு ஊறுபாடு நேரக்கூடாதே என்ற அச்சத்தால் இறைவனை வழிபடத் தொடங்கினார்கள். தமக்கு இறைவ னுடைய துணை இருந்தால்தான் வாழலாம் என்ற எண்ணம் இருப்பதால் அடுத்தடுத்து வழிபடுகிறார்கள். அரும்பு மலரும் பருவத்தில் இருந்தால் அதைப் போது என்று சொல்வார்கள். அரும்பு முதிர்ந்தால் பேரரும்பு ஆகும்; அதுதான் போது. அது முதிர்ந்தால் மலரும். போது மலர் ஆகும். அரும்பு, போது, மலர் என்ற மூன்று நிலையையும், "காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந் நோய்" என்று திருவள்ளுவர் ஓரிடத்தில் அமைக்கிறார். இறைவனு டைய பூசைக்குப் பேரரும்பாகிய போதும் மலரும் உரியன. சிறிய அரும்பைக் கொய்து அருச்சனை செய்வதில்லை. கொய் வதற்குரிய பேரரும்பை அரும்பென்றும் கொய்யத் தகாத அரும்பைக் காயரும்பென்றும் சொல்வது உலக வழக்கு. தேவர்கள் இறைவனைப் பூசிக்கிறார்கள். கையாலே பேரரும்பாகிய போதையும் மலரையும் தூவுகிறார்கள். அவனால் தமக்கு உண்டாகும் பயனை எண்ணி எண்ணி அவனை விரும்புகிறார்கள்; காதலிக்கிறார்கள். வானோர்கள் நாள்தோறும் இப்படி வணங்குகிறார்கள். மூன்று போதும் தம்முடைய முடியைச் சாய்த்து வணங்கிக் கைகூப்பித் தொழுகிறார்கள். தன்னுடைய திருவடியின் கண்ணே முடி படிய வழிபட்டும் கைகுவித்து அஞ்சலி செய்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/33&oldid=1726773" இலிருந்து மீள்விக்கப்பட்டது