எப்போதும் இனியான் 25 வானோர்கள் தொழாநிற்க, அவர்களுக்குத் துணையாக நிற்கிறான் இறைவன். அப்படித் தொழும் அமரர்கள் தம் காலம் செல்லத் தாமும் செல்கிறார்கள். புதிய தேவர்கள் வருகிறார்கள். அவர்களும் இறைவனை முதல்வனாக உணர்ந்து கையில் உள்ள போதையும் மலரையும் தூவிக் காதலித்து, முப்போதும் முடிசாய்த்துத் தொழுகிறார்கள். இவ்வாறு தேவர்கள் வருகிறார்கள்; போகிறார்கள். ஆனால் அவர்களுடைய முதல்வனாகிய இறைவன் எப்போதும் தளர்ச்சியின்றி,போக்கின்றி,வரவின்றி, இறப்பின்றி, பிறப்பின்றி நிற்கிறான். கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள் முப்போதும் முடிசாய்த்துத் தொழ, நின்ற முதல்வனை. (வானவர்கள் கையிலுள்ள பேரரும்பையும் மலரையும் தூவி விரும்பி மூன்று பொழுதும் தம் முடியைச் சாய்த்து கையால் தொழ,சலனமின்றி ஒரு படித்தாக நின்ற தலைவனை. முதல்வனை என் மனத்தே வைத்தேனே' என்று சொல்ல வருகிறார். . . போது - பேரரும்பு. காதலித்து - விரும்பி. முடிசாய்த்தல்- காலில் முடிபடிய வணங்குதல். தொழுதல் - கைகூப்பித் தொழு தய். திருவடியில் வீழ்ந்து எழுபவர், பின்பு கையால் தொழுதல் வழக்கம். நின்ற - நிலையாக நின்ற.) அப்பர் சுவாமிகளும் அந்த முதல்வனை வழிபட்டார். ஆனால் தேவர்கள் வழிபட்டதற்கும் அவர் வழிபட்ட தற்கும் வேறுபாடு உண்டு. தேவர்கள் ஒரு பயன் கருதி இறைவனை வழிபட்டார்கள். திருநாவுக்கரசரோ,"கூடும் அன்பினில் கும்பிட லேயன்றி, வீடும் வேண்டா விறல் உடையவராதலின் அவனை வழிபடுவதனையே இன்பமாகக் காண்பவர். அவர் தாம் வழிபடும் வண்ணத்தைச் சொல்கிறார், .
பக்கம்:இரவும் பகலும்.pdf/34
Appearance