26 இரவும் பகலும் தேவர்கள் மலர் தூவி வழிபட்டார்கள். நாவுக்கரசரும் மலர் தூவினார். அதற்குமுன் இறைவனுக்கு நீராட்டினார். அபிடேகம் செய்து அருச்சனை செய்வது மரபாதலின் புனல் தூவிப் பிறகு பூவும் தூவினார். தேவர்களும் அப்படிச் செய்வதுண்டு. ஆனால் அவர்கள் தம்முடைய சுகவாழ்வுக் குக் கேடு நேராவண்ணம் இறைவன் துணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் பூசை செய்தார்கள். தம் வாழ்க்கையில் தம் பொறிகளால் பெறும் இன்பம் நிரம்ப வேண்டும் என்பது அவர்கள் நோக்கம். கற்பதரு நீழலின் தண்மையை இடையூறின்றி நுகரவேண்டும். காமதேனு வினால் பெறும் பண்டங்களைக் குறைவின்றிப் பெற வேண்டும். அரம்பையரால் வரும் இன்பம் முழுமையாக இருக்கவேண்டும்' என்று தம்முடைய புலன்களின் நுகர்ச்சி யில் சிறிதும் குறைவு வராமல் நிரம்புவதை வேண்டியே அவர்கள் வழிபட்டார்கள். அப்பர் சுவாமிகளோ, ஐம் பொறியையும் அடக்கினார், இறைவனுடைய தொடர் பில்லாத புலன்களிலே செல்லாமல் ஒடுக்கினார். அவை அவருடைய தவச் சிறப்பால் அகத்தே அடங்கின. விரிப் பதையே தங்கள் தொழிலாக உடைய தேவர்களுக்கு மாறாகச் சுருக்குவதையே தம்முடைய தவமாகக் கொண்ட பெரியார் அப்பர். அதுமட்டுமா? தேவர்கள் இறைவனைக் கும்பிடுவதற் குக் காரணம், பகைவர்களால் தமக்கு இடையூறு நேருங் கால் அவன் துணையாவான் என்பதுதான். ஆகவே அவர் களுடைய மனத்தின் ஆழத்தில் வேரூன்றி இருப்பது தம் போகங்களில் உள்ள இச்சை; அதற்கு மேலே இருப்பது அப்போகத்துக்கு இடையூறுகளை உண்டாக்கும் பகைவர் களிடம் உள்ள அச்சம்; அதற்குமேல்தான் இறைவனிடம் விருப்பம் இருக்கிறது. அச்சமும் விருப்பமும் மேற்பரப்பில் உள்ளவை; எந்தக் கணத்திலும் போய்விடும். உடம்பில் அணிந்த சட்டையைப்போல அவற்றை அவர்கள் கழற்றி
பக்கம்:இரவும் பகலும்.pdf/35
Appearance