எப்போதும் இனியான் 27 விடும் நேரமும் உண்டு. ஆனால் செல்லுமிடங்களி லெல்லாம் உடம்பு நீங்காது வருவதுபோல, தேவர்களின் உள்ளத்தில் எப்போதும் இடம் கொண்டிருப்பது போக இச்சை. அப்பர் உள்ளத்தே என்ன இருக்கிறது? ஐம்புலன் களையும் அகத்தே அடக்கினவர் அவர். ஆதலின் அவருக் குப் போகத்திலே நாட்டம் இல்லை. அவர் இறைவனிடத்தே வைத்த அன்பு தூய அன்பு. அவருடைய உள்ளத்தே வேறு ஒன்றும் இல்லை; இறைவன்தான் இருக்கிறான். ஐம்புலன்களையும் போக நுகர்ச்சியிலே விரிய வைத்து, தம் உள்ளத்தே அப்போகத்தின்மேல் இச்சையை வைத்து, அந்தப் போகத்துக்கு இடையூறு வாராமல் இவன் பாதுகாப்பான் என்ற நினைவினால் வழிபடும் வானோர் களுக்கு இறைவன் எப்போதும் நன்மை செய்வதில்லை. அவர்களுக்குத் தண்டனையும் தருகிறான். ஆனால் ஐம்புலனை அகத்தடக்கிப் போகத்தின்பால் எள்ளளவும் நாட்டமின்றித் தம் உள்ளத்தே இறைவனை யன்றிப் பிற பொருளை வைக்காமல் வழிபடும் அடியவர் களுக்கு அவன் எப்போதும் இன்பத்தைத் தருகிறான். அவனையே உள்ளத்தில் வைத்தமையால் எப்போதும் இனியானாக இருக்கிறான். கற்கண்டுக் கட்டியை வாயிலே அடக்கிக் கொண்டவனுக்கு வாய் எப்போதும் இனிக்கு மாறுபோல, இறைவனை மனத்தே வைத்தவர்களுக்கு அவன் எப்போதும் இனிக்கிறான். தேவர்களோ கையால் மலர் தூவினாலும் அவனைக் கருத்தின் ஆழத்தில் வைப்பதில்லை. உலகத்தாரிற் பலர் இறைவன் அருள் செய்யவில்லை என்று சொல்வதுண்டு. "நான் அவனையே நினைந்திருக் கிறேன். அவன் இன்னும் எனக்கு அருள் புரியவில்லை" என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள்.நோய்வாய்ப்
பக்கம்:இரவும் பகலும்.pdf/36
Appearance