28 இரவும் பகலும் பட்டவன் சர்க்கரையை வாயிற் போட்டால் கசக்கிற தென்று சொல்வான். அதற்குச் சர்க்கரை காரணமன்று; அவன் நோயே காரணம். ஐம்புலனை அடக்காமல் இறை வனை மனத்தே வைத்ததாகச் சொல்கிறவர்களுக்கு அவன் எப்போதும் இனியனாக இராததற்குக் காரணம், அவர் களுக்குப் புலன் நுகர்ச்சியிலே நாட்டம் இருப்பதுதான். இறைவனைத் தலை மேலும் தோள் மேலும் வைத்துப் பயன் இல்லை. மனத்தகத்தே வைக்க வேண்டும். கற் கண்டைக் கையில் வைத்துக்கொண்டால் இனிக்காது. வாயிலே போட்டுச் சுவைக்க வேண்டும். கையால் எடுத்து வாயிலே போடுவதுபோல, அப்பும் (நீரும்) மலரும் தூவிப் புற உறுப்புக்களால் வழிபட்டு, உள்ளத்தே வைக்க வேண்டும். ஐம்புலனையும் அடக்கி, உள்ளத்தே வைத்தால் அவன் எப்போதும் இனியனாக இருப்பான். நோயில்லாத வன் வாயில் கற்கண்டை அடக்கிக்கொண்டால் அதன் இனிப்பை நுகர்வதுபோல அப்பர் இறைவனை எப்போதும் இனியனாகக் கண்டார். தேவர்கள் தங்கள் முதல்வனாகக் கண்டார்கள்; அப்பரோ எப்போதும் னியனாகக் கண்டார். கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள் முப்போதும் முடிசாய்த்துத் தொழ நின்ற முதல்வனை, அப்போடு மலர் தூவி ஐம்புலனும் அகத்தடக்கி எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே. நீரோடு [பின் இரண்டடி; எப்போதும் இனியவனை மலரைத் தூவி ஐம்பொறிகளையும் நுகர் பொருள்களின்மேற் சாராமல் அகத்தே அடக்கி என் உள்ளத்துள்ளே வைத்தேன். அப்பு - நீர். புலன் என்பது இங்கே பொறியை உணர்த்தி ஆகுபெயர். அகத்து அடக்கி - புறம்போந்து நுகர் பொருள்களின்மேற் பாயாமல் உள்ளே செயலின்றி நிற்கும்படி யது;
பக்கம்:இரவும் பகலும்.pdf/37
Appearance