இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கற்பனைக் காட்சி 33 போன்றது இது. இதனை நாமைகதேச நாமகிரகணம் என்று வட மொழியாளர் கூறுவர்.வாழ்நர் என்பது வாணரென வந்தது. பேதுற, ஐயுற, எங்க, நகும் தலை என்று கூட்டவேண்டும். நகுதலையையுடைய கெடிலவாணர் இருந்தவாறு என்னே என்று சில சொற்களை வருவித்துப் பொருளுரைக்க வேண்டும். அறியாமையால் அஞ்சுகின்றவற்றை அணிந்திருக்கும் அவா கோலத்தைக் கண்ட வியப்பினால் தரம் சொல்வதை முற்றும் கூறி முடிக்க முடியாமல், "கெடில வாணரே!" என்று நிறுத்தினார். 'கெடிலவாணர் இருந்தபடி என்ன வியப்பு' என்று வேண்டிய சொற்களைப் பெய்து பொருள் கொள்ளவேண்டும். இதை இசை யெச்சம் என்று சொல்வார்கள். இந்தப் பதிகத்தின் பத்துப் பாடல்களும் இப்படியே முடிகின்றன.) இது பத்தாம் பதிகத்தின் எட்டாம் பாட்டு. இ--3