என்ன குறை? 35 முறை அரிசி முதலியவற்றை வாங்கி வைத்துக்கொள்ளு கிறான்; மாதத்துக்கு ஒருமுறை எண்ணெய் முதலிய பொருள்களை வாங்கிச் சேமிக்கிறான்; வாரத்துக்கு ஒரு முறை கிழங்கு முதலியவற்றை வாங்குகிறான்; தினந் தோறும் பாலும் காய்கறியும் வாங்குகிறான்; சில ஆண்டுகள் பயன்படுத்தும் பாத்திரங்களும் பல ஆண்டுகளுக்கு உதவும் அணிகளும் அவனிடம் இருக்கின்றன. ஆகவே அவன் எல்லாப் பண்டங்களையும் ஒரேயடி யாகக் குவித்துக் கொள்வதில்லை. ஆனால் ஒன்றைமட்டும் எப்போதும் ஈட்ட முயல்கிறான். அதனை எத்தனை காலமானாலும் வைத்துக்கொள்ளலாம். எல்லாப் பண்டங் களையும் அதைக் கொண்டு எந்தச் சமயத்திலும் பெறலாம். அது என்ன? அதுதான் செல்வம். செல்வம் படைத்தவன் தனக்கு அவ்வப்போது வேண்டும் பண்டங்களை வாங்கிக் கொள்ள முடியும்.ஏதேனும் புதிய இடத்துக்குச் செல்லும் போது தனக்கு வேண்டிய பண்டங்கள் அத்தனையையும் அவன் தூக்கிக்கொண்டு செல்ல முடியாது; ஆனால் கையில் பணம் இருந்தால் எங்கே போனாலும் வேண்டியவற்றை வாங்கிக்கொள்ளலாம். ஆதலின் மனிதன் பணத்தை ஈட்டுவதில் நாட்டமாக இருக்கிறான். செல்வம் ஈட்டுவது மனிதனுக்கே உரியசெயல். அது விலங்கினிடம் இல்லை. பணம் படைத்தவனுக்கு என்ன பண்டம் வேண்டுமானாலும் கிடைக்கிறது. அவனுக்கு வாழ்க்கைக் குரிய வசதிகளில் குறை உண்டாவதில்லை. எத்தனை செல்வத்தை ஈட்டினாலும் அது வர வரக் குறைந்துகொண்டே வரும். அதனால் பெரிய செல்வர்கள் கூட மேலும் மேலும் செல்வத்தை ஈட்டிக்கொண்டே இருக் கிறார்கள். தம்முடைய செல்வம் எவ்வளவு மிகுதியாக இருந்தாலும் அதற்கு எல்லையுண்டென்று அறிந்து, அந்த எல்லையைக் காணும் காலம் வந்தால் என்ன செய்வது என்று
பக்கம்:இரவும் பகலும்.pdf/44
Appearance