38 இரவும் பகலும் கின்றன. செல்வர்களை அணுகி, "நீங்கள் எப்படிப் பணம் சேர்த்தீர்கள்?" என்று கேட்டால், "பாடுபட்டுச் சேர்த் தோம்" என்று சொல்வார்கள். அதற்குமேல் பொருள் சேர்க்கும் நுணுக்கங்களைச் சொல்வது அரிது. "நீங்கள் எப்படி இறைவனுடைய பொற்கழலை உங்கள் அகத்திற்குள் வந்து இருக்கும்படி செய்தீர்கள்? என்று அப்பர் சுவாமிகளைக் கேட்டுப் பார்க்கலாம். அந்த அருட் செல்வர் ஒளிவு மறைவு இன்றிச் சொல்கிறவர்; தாம் பெற்ற செல்வத்தை எல்லோரும் பெறவேண்டும் என்று விரும்பும் பெரியார். அவர் சொல்கிறார். அதையும் இறைவனைப் பார்த்துச் சொல்வதுபோலச் சொல்கிறார். "உன் கழல் கிடைக்காது என்றல்லவா நினைத்தேன்? அது உண்மையாக அன்புடன் நாடுவாருக்குக் கிடைக்கத் தக்கதாக இருப்பதை முன்பு உணரவில்லை. அது மென்மை யான கழல்; பூங்கழல்; தாமரை மலரைப் போன்ற திருவடி. அதை நான் தொழுதேன்; வாயால் புகழ் கூறிப் பரவி னேன். அப்படிப் பலகால் செய்ததனால் நான் பெற்ற பேறு என்னே! புண்ணியா? புனிதா! அக் கழலை நான் தேடித் தேடி அலைந்த நிலை மாறி அது இங்கே, என் உள்ளத்தே. இருக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது' என்கிறார். பூங்கழல்தொழு தும்பரவியும் புண்ணியா/புனி தா உன்பொற்கழல் ஈங்கிருக்கப் பெற்றேன்; என்ன குறையுடையேன்? இறைவனுடைய திருவடித் தியானத்தை எப்போதும் செய்பவர்களுக்கு எந்தவிதமான குறையும் வராது. ஆனால் எளிதில் அந்தத் தியானம் சித்தியாது. பலகாலம் அவனு டைய கழலை உடம்பால் வணங்கவேண்டும்; பின்பு
பக்கம்:இரவும் பகலும்.pdf/47
Appearance