என்ன குறை? 39 வாயினால் துதிக்க வேண்டும்; அப்போதுதான் உள்ளத்தில் அந்தக் கழல் பதியும். ஒரு பொருளை ஒருகால் கண்டால் அது நம் உள்ளத்தே பதிவதில்லை. பலமுறை கண்டு கண்டு பழகினால் அதைப் பற்றிப் பேசும் நிலை வரும். பலமுறை கண்டும் பலமுறை அதைப் பற்றிப் பேசியும் பயின்றால் அது நம் மனத்தே குடிகொண்டிருக்கும். குறைவிலா நிறைவாகிய இறைவன் கழலை உள்ளத் தில் எப்போதும் நிலை கொள்ளும்படி செய்யப் பலகால் பயிலவேண்டும்.உடல்,நா,உள்ளம் என்ற மூன்றும் முக்கரணங்கள் என்று பெயர் பெறும். உடலால் செய்யும் செயலும் நாவால் பேசும் பேச்சும் உள்ளத்தால் நினைக்கும் நினைப்பும் மூன்று கரணங்களால் இயற்றப் பெறுவன. செயலிலே பழகி முதிர்ந்தால் பேச்சிலே நிலைக்கும்; அது முதிர்ந்தால் மனத்திலே நிலைபெறும். அப்பர் சுவாமி களுடைய உள்ளத்திலே இறைவன் பொற்கழல் நிலை பெற்றதற்கு அவர் அக் கழலைத் தொழுதும் பரவியும் பயின்ற பயிற்சியே காரணம்.
இந்த நினைவு நாவுக்கரசருக்குத் திருவாரூரிலே வந்தது. அங்கே எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் பார்த்துப் பெருமிதத்தோடு இதைச் சொல்கிறார். இறைவன் பொற் கழல் உறையும் இடமாக மனத்தை வைத்திருக்கும் தமக்கு ஒரு குறையும் இல்லை என்றார்; அவன் இருக்கும் திருத் தலத்திலும் குறைவின்றிப் பல வளங்கள் நிறைந்திருக் கின்றன என்று சொல்ல வருகிறார். திருவாரூரில் நீர்வளம் நிலவளம் நிரம்பி யிருக்கின்றன. அவற்றை அங்கு உள்ளயிரங்கள் காட்டுகின்றன. மரங் கள் பலவகை; துடையவை, மலரால் பய னுடையவை, கலியால் பயனுடையவை, வேறு ஒன்றுக்கும் 47277