இரவும் பகலும் ஆகாமல் விறகுக்கு ஆவன என்று பல வகையான பயன் களை உடையவை அவை. இவற்றுள் கனியாற் பயனுடை யவை சிறந்தவை. ஊருக்குள் பழ மரங்கள் இருந்தால் அவை மிக்க பயனைத் தருவன. "பயமரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கட் படின் என்று வள்ளுவர் பழ மரத்தைப் பிறருக்கு ஈயும் வள்ள லுக்கு உவமை கூறுவர். திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமான் பெருவள்ளல்; தியாகேசன் என்பது அவன் திருநாமம். அவன் கழல் வைத்த இடமெல்லாம் குறை வின்றி நிறைவு பெறும். அடியார்கள் உள்ளத்தில் அப் பொற்கழல் இருந்தால் அவர்கள் நிறைவு பெற்று, "என்ன குறையுடையேம்?" என்று சொல்வார்கள். ஒரு தலத்தில் அப் பூங்கழல் இருந்தால் அங்கே பழ மரங்கள் பல்கி வளரும். திருவாரூரில் பழ மரங்கள் பல பழுத்து நிற்கின்றன. நெடுந்தூரத்திலிருந்து திருவாரூரை நோக்கி வருவா ருக்கு ஊருக்குள்ளே புகுவதற்கு முன்பே அங்குள்ள நில வளம் தெரிந்துவிடுகிறது. உயரமாக ஓங்கி நிற்கும் தென்ன மரங்கள் தலை நிமிர்ந்து. "என்ன குறையுடையேம்?" என்று சொல்வனபோலத் தோன்றுகின்றன. ஊரைப் பின்னும் அணுகினால் ஓங்கிய தெங்குகளுக்கு அருகே அடர்ந்து நிற்கும் கமுக மரங்கள் தெரிகின்றன. அவற்றி னுடைய ஓலைகள் எப்படி நீண்டு அகன்று படர்ந்திருக் கின்றன! அநேகமாக ஊரின் எல்லைக்கே வந்துவிட்டோம். கம் என்ற வாசனை வீசுகிறது. இந்த வாசனை, மலரின் மணம் அன்று; வாழைப் பழத்தின் மணம். தளதள வென்று வாழை மரங்கள் வளர்ந்து கனிந்த குலைகளைத் தாங்கி நிற்கின்றன. அவற்றின் கீழே இளவாழைக் கன்று
பக்கம்:இரவும் பகலும்.pdf/49
Appearance