என்ன குறை? 41 கள் வளர்கின்றன.தோட்டத்துக்குள்ளே புகுந்து பார்த் தால் மாமரங்கள் நிற்பதைக் காண லாம். மாதுள மரங்கள் வளர்ந்து பழுத்து நிற்கின்றன. எல்லா மரங்களி லும் கனிகள் குலுங்குகின்றன. எல்லாக் கனிகளும் இனிமையை உடையன; மக்களுக்குப் பயன்படுவன. மரங் களிவிருந்து அவை கனிந்து சிதறுகின்றன. என்ன அழகு! என்ன வளம்! ஊருக்குள் பழ மரங்கள் பழுத்து நிற்கும் காட்சியும், அவற்றுக்கு மூலகாரணமாக எழுந்தருளி யிருக்கும் திருவா ரூர் அம்மானும்,அவனுடைய பொற்கழலும், அப்பொற் கழலைத் தன்னிடத்திலே பெற்ற அப்பர் சுவாமிகளுடைய திருவுள்ளமும் நினைக்க நினைக்க இன்பத்தைத் தருகின்றன. அவற்றையெல்லாம் நினைந்து பக்தி செய்யும்படியாகத் திருநாவுக்கரசர் இந்தப் பாசுரத்தை திருக்கிறார். பூங்கழல்தொழு தும்பரவியும் அருளிச் புண்ணியா/புனி தா/உன்பொற்கழல் ஈங்குஇருக் கப்பெற்றேன்; என்ன குறையுடையேன்? ஓங்குதெங்கு, இலை யார்கமுகு,இள வாழை, மாவொடு மாதுளம்பல தீங்கனி சிதறும் திருவாரூர் அம்மானே! செய் [புண்ணியத் திருவுருவானவனே! தூய்மையே உருவாக அமைந்தவனே! வளர்ந்தோங்கிய தென்னை,இலை நிறைந்த கமுகு, இளவாழை மரங்கள், மாமரம் இவற்றோடு மாதுள மரமும் பல இனிய கனிகளை உதிர்க்கும் திருவாரூரில் இருக்கும் இறைவனே! உன் னுடைய மலரைப் போன்ற திருவடியைக் கையால் தொழுதும் நாவால் புகழ்ந்தும் உன் பொன்னாலாகிய கழலை
பக்கம்:இரவும் பகலும்.pdf/50
Appearance