உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இரவும் பகலும் அணிந்த அவ்வடியை நினைத்து அது என் உள்ளத்தே இருக்கும் படியான பேற்றைப் பெற்றேன்; இனி என்ன குறையை உடையவனாவேன் ? (ஒரு குறையும் எனக்கு இல்லை.) ? - பூங்கழல் - தாமரை மலரைப்போன்ற திருவடி; கழல்: ஆகு பெயர்: பொலிவு பெற்ற அடி என்றும் சொல்லலாம். தொழுதல், கையின் செயல்; அது வணங்குதல், பணிதல் முதலிய மெய்யோ பணைந்த செயல்கள் அனைத்தையும் உபலட்சணத்தால் கொள் ளும்படி நின்றது. பரவியும் புகழ்ந்தும்; திருநாமம் கூறுதல், புகழைப் பாராட்டுதல், பாடுதல் ஆகிய அனைத்தையும் இது சுட்டியது. புனிதன் - தூயவன். பொற்கழல்- பொன்னாலான கழலை அணிந்த திருவடி; பொன் போன்ற திருவடி என்றும் தோன்றும்படி இத் தொடர் அமைந்திருக்கிறது. கழலின் அரு மைப் பாட்டை எண்ணி, அதைப் பலபடியாகப் பாராட்ட வேண்டும் என்ற நினைவால், பூங்கழல் என்று முன் சொன்னவர், பின்பு அது என்று சொல்லாமல் மீட்டும் பொற்கழல் என்று கூறினார். என்றாலும் அதையே சுட்டியதாகக் கொள்ளவேண்டும். ஈங்கு - என் மனத்தில்; ஈங்கு என்று அணிமைச் சுட்டாற் சொன் னது, தம் நெஞ்சைக்காட்டிலும் நெருங்கியது ஒன்று இன்மையால். இன்னது என்று சொல்லாமல் ஈங்கு என்று சுட்டியதன் பொருள் அவர் உள்ளத்துக்குத் தெரியும்; இது நெஞ்சறி சுட்டு. இருக்க- நிலைபெற்றிருக்க. என்ன - எத்தகைய. தெங்கு - தென்னை. இலை - யென்றது கமுகின் ஓலையை. தீங்கனி - இனிய பழங்களை. உதிரச் செய்யும். அம்மான் - தலைவன்; சிதறும் - கனிந்து கடவுள்.] . இப் பாட்டு இருபதாம் திருப்பதிகத்தில் உள்ள நான் காம்பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/51&oldid=1726792" இலிருந்து மீள்விக்கப்பட்டது