உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இரவும் பகலும் ஆதலின் போக்கு ஒன்று காட்ட எண்ணினாள்."நான் பாதாளத்துக்கு வருவேன். ஆனால் நேரே வர இயலாது. என்னை யாரேனும் தாங்கி விட்டால் வருவேன்" என்றாள். மேல்மாடியிலிருந்து கீழே இறங்கும் அரச குமாரிக்குக் கைலாகு கொடுக்க யாரேனும் முன் வருவதைப்போல ஒருவர் வேண்டுமென்று அவள் விரும்பினாள் போலும்! பகீ ரதன் தவம் செய்வதற்கு அலுக்காதவன். முன்பு பிரமனை நோக்கித் தவம் செய்தான்; அப்பால் கங்கையை நோக்கித் தவம் செய்தான். இப்போது கங்கையைத் தாங்கிக்கொள்ள யாரைக் கெஞ்சுவது என்று எண்ணிப்பார்த்தான்.மறுபடி யும் பிரமனை நோக்கித் தவம் செய்தான். பிரமதேவன் தோன்றி, "கங்கையைத் தாங்குவது என்பது நம்மால் முடி யாது? பரமசிவனைக் குறித்துத் தவம் செய்வாயாக!' என்று கூறிவிட்டான். மறுபடியும் அவன் சிவபிரானை நோக்கித் தவம் புரிந்தான். இறைவன் பகீரதன்முன் எழுந்தருளினான். அவ னுடைய தவத்தை உணர்ந்து இறைவனுக்கு மிக்க கருணை உண்டாயிற்று. கருணை மிகுதியினால் தன்னுடைய அடியார் களைக் காக்க எவ்வளவோ தூரம் இறங்கி வருகிறவன் அவன். இப்போது மற்றவர்கள் இறங்குவதற்கும் துணை செய்ய முன் வந்தான். கங்கை இறங்க முடியாமல் நிற்கவில்லை; இறங்க விருப்பம் இல்லாமல் இருந்தாள். அவளுக்கு அகந்தை நிரம்பியிருந்தது.பகீரதன் தவத்தை மெச்சி, கங்கையை நான் தாங்குகிறேன்" என்று கூறியருளினான் இறைவன். மீட்டும் பகீரதன் தவம் செய்து கங்கையை வருவித்தான்; சிவபிரான் ஏற்றுக்கொள்வதாக அருளியதைக் கூறினான். கங்கையோ தன்னை ஏற்பார் யாரும் இருக்கமாட்டார் என்ற எண்ணத்தோடு இருந்தாள். இறைவன் ஏற்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/53&oldid=1726794" இலிருந்து மீள்விக்கப்பட்டது