உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊடலும் ஆடலும் 45 அவள் விரும்பவில்லை. இறைவனுடைய பேராற்றலை அவள் மறந்தாள். தன் ஆற்றலைக் காட்டவேண்டுமென்று ஆயிர முகமாகப் புறப்பட்டாள். இறைவனுக்கு அடங்காதவர் யார்? ஆரவாரத்தோடு வந்த கங்கையை இறைவன் ஒரு சடையிலே அடக்கிவிட்டான். அதற்குமுன் அடங்காப் பிடாரியாக இருந்த கங்கை கணவன் முன் நிற்கும் மனைவி யைப்போல அடங்கி ஒடுங்கி நின்றாள். ஆற்றின் உருவில் அகங்கார வெம்மையோடிருந்த அவள் கருணைப் பெருங் கடலிலே கலந்து வெம்மை நீங்கினாள். பிறகு இறைவன் அங்கிருந்து கீழே விட்டான். பூவுலகத்துக்கு வந்து அப்பால் பாதாள வுலகத்துக்கும் பகீரதனைப் பின்பற்றிச் சென்றாள். அவள் முன்பு இருந்த இருப்பென்ன! இப்போது மாறிய வகை என்ன ! கருணை மயமான இறைவனுடைய தொடர் பினால் அவளுக்கும் கருணை உண்டாகிவிட்டதால், அழைத்த இடத்துக்கெல்லாம் வருகிறேன் என்பவளைப் போலப் பகீரதனைப் பின்பற்றிப் போனாள். இறைவன் தன் சடையில் கங்கையைச் சுமந்திருக்க வில்லை. அவள் அவனுக்கு ஒரு பாரம் அல்லவே! அவளைப் பூப்போலச் சூடியிருக்கிறான். அவனுடைய திருமுடியிலே கங்கை அடக்கமே உருவான பெண்ணாக விளங்கு கிறாள். இறைவன் தன் திருமுடியிலே கங்கையை ஏற்கும் போது அவள் ஆரவாரத்தோடு வந்தாள் அல்லவா? அந்த ஆரவாரம் உமாதேவியின் காதில் விழுந்தது. இதென்ன பேரிரைச்சல்?' என்று அம்மை ஆராய்ந்தாள். உண்மை விளங்கியது. "நான் ஒருத்தி இங்கே இருக்க, என்னை அறியாமல், என்னிடம் கூறாமல் வேறு ஒருத்தியைச் சடை மேல் வைப்பதாவது!" என்று அப் பெருமாட்டிக்குக் கோபம் உண்டாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/54&oldid=1726795" இலிருந்து மீள்விக்கப்பட்டது