உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ? இரவும் பகலும் நேரத்துக்கு ஒரு காதலுமாக இருந்தால் மனம் ஒன்றிலே நிலைப்பது ஏது? ஒன்றை விட்டு ஒன்று பற்றினேன். நான் பற்றினாலும் அது என்னை விட்டுக் கழன்று போயிற்று. எதைப் பற்றவேண்டுமோ அதைப் பற்றாமல் வாழ்ந்தேன்.' வாழ்க்கை உறுதியான பற்றுக்கோடு ஒன்றும் இல்லாத வாழ்க்கை ஆகிவிட்டது.' ஏன் பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன். 'இப்படியே என் வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. கடைசியில் எனக்கும் கொஞ்சம் அறிவு தட்டுப்பட்டது. என் உயிரையே மாய்க்கும் சூலை வந்தது. அதுவரையில். நான் தக்க பற்றுக்கோடின்றி நடை போடுகிறேன் என்ற நினைவே எனக்கு இல்லை. இப்போது நான் தளர்ந்தேன். என் உடல் வலிமை கெட்டது. என் மந்திர தந்திரம் கைவிட்டன. சுற்றியுள்ளார் கைவிட்டார். எதை எதைப் பற்றாக எண்ணிப் பற்றினேனோ அவையெல்லாம் நழுவின. அப்போதுதான் எனக்கு உண்மையான பற்றுக்கோடு இல்லை என்பது புலப்பட்டது. எதை எதையோ நம்பி மோசம் போனேன் என்பது தெளிவாயிற்று. பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்த அவலம் தெரிந்தது. மூடனுக்குத் தானே பட்டாலன்றிப் பிறர் கூறினால் தெரியாது என்பார்கள். கயவனாக வாழ்ந்த எனக்கும் பட்டாலன்றி அறிவு உண்டாகவில்லை. உலகத் தார் சொல்லும் பழமொழி உண்மையாயிற்று. நானே அதற்கு இலக்காக, பொருத்தமாக, அதற்கு ஒத்தபடி நின்றேன்.' அப்பற்றைப், பற்றுக

  • "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்,

பற்று விடற்கு." (திருக்குறள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/59&oldid=1726800" இலிருந்து மீள்விக்கப்பட்டது