உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. என் செய்கேன்! அப்பர் சுவாமிகள் சற்று ஓய்வாக அமர்ந்திருந்தார். ஏதோ உள்ளத்திலே சிறிதளவு சலிப்புத் தோன்றியது. பழைய கதை அவர் மனக் கண்ணில் ஏடு ஏடாக விரிந்தது. 'நாம் சைவ மரபிலே பிறந்தோம். வழி வழியாகச் சிவ பெருமானுடைய அடிக்கே ஆளாக வேண்டிய நாம் உறுதி யாக அந்த வழியிலே செல்லவில்லை.எங்கெங்கோ மனம் தாவியது. புகழுக்கும் மதிப்புக்கும் ஆசைப்பட்டது. சைனனாக மாறினோம். அங்காவது முழுப்பற்று இருந்ததா? அதுவும் இல்லை. இப்படி எத்தனை காலம் வாழ்ந்தோம்! ஒரு நாளா, இரண்டு நாளா? பல ஆண்டுகள் கழிந்தன. அவ்வளவு காலமும் நாம் வாழத்தான் வாழ்ந்தோம். ஆனால் எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழவில்லையே !' நல்ல உணவை உண்ணத் தொடங்கியபோது, அட்டா! இவ்வளவு நாள் கூழுக்கும் வகையின்றித் துன் புற்றோமே!' என்று வருந்துவதுபோல அப்பர் வருந்த லானார். இடையீடில்லாமல் இளம் பருவ முதலே எம்பெருமா னிடம் ஆராத அன்பு கொண்டு வாழ்ந்திருந்தால் எத்தனை இன்பத்தை அடைந்திருக்கலாம்! நான் போக்கிய காலம் கொஞ்சமா? அத்தனை காலமும் வீணாகக் கழித்து விட்டேனே ! பாழுக்கல்லவா நீர் இறைத்தேன்? ஆம், உடல் வருந்தி இறைத்ததிற் குறைவில்லை. ஆனால் எதற்கு இறைக்க வேண்டுமோ, அதற்கு இறைக்கவில்லை. மனத் திலே எதையாவது ஒன்றைப் பற்றினால் அதைப் பற்றியே வாழலாம். நாளுக்கு ஒரு பொருளின்மேல் நாட்டமும் -4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/58&oldid=1726799" இலிருந்து மீள்விக்கப்பட்டது