48 இரவும் பகலும் சூடினார் கங்கை யாளைச் ; சூடிய துழனி கேட்டு அங்கு ஊடினாள் நங்கை யாளும்; ஊடலை ஒழிக்க வேண்டிப் பாடினார் சாம வேதம்; பாடிய பாணி யாலே ஆடினார், கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே. [கெடில நதியை எல்லையாக உடைய திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளிய சிவபெருமான், கங்கையைத் தம் தம் திருமுடியில் சூடினார்; அப்படிச் சூடும்போது உண்டான ஆரவாரத்தைக் கேட்டு அப்போது உமாதேவி ஊடினாள்; அப் பெருமாட்டியின் ஊடலை ஒழிக்க விரும்பி இறைவனார் சாம வேதத்தைப் பாடினார்; அதைப் பாடின தாளத்திற்கு ஏற்பச் சதி மிதித்து ஆடினார். " சூடுதல் - தலையில் அணிதல். துழனி - ஆரவாரம். மற்ற வர்கள், "கங்கையைச் சூடினார் என்று சொல்லும் ஆரவாரம் என்றும் சொல்லலாம். அங்கு - அப்போது, நங்கையாள் உமாதேவி. பரணி - தாளம்; பாணியால் - பாணிக்கு ஏற்ப. வேலி -எல்லை.] இது, 27-ஆம் பதிகத்தில் உள்ள திருப்பாட்டு. ரண்டாவது
பக்கம்:இரவும் பகலும்.pdf/57
Appearance