என் செய்கேன் 1 53 மரண பயம் என்பது எத்தகைய ஓர் ஆட்டு ஆட்டி விடும் ஆற்றல் உடையது. அதனால் அப்பர் சுவாமி கள் இவ்வாறு பாடினார். எட்டு வீரட்டானங்களுள் திருக்கடவூர் ஒன்று. அது யமனை இறைவன் உதைத்த தலம்; சோழ நாட்டில் காவிரிக்குத் தென் கரையில் உள்ளது. இறைவன் அமுத கடத்துள் தோன்றியமையால் கடவூர் என்ற பெயர் வந்தது. காலபயம் தீர்த்த இடத்தில் காலனுடைய நினைவு வருவது இயற்கை. அறிவுடையார் அஞ்சவேண்டுவதைக் கண்டு அஞ்சுவார்கள். நாமோ கடவூரைக் கண்டாலும் காலனை நினைப்பதில்லை; செத்துப்போவாரைக் கண்டாலும் மர ணத்தை நினைப்பதில்லை; ஒருகால் நினைத்தாலும் அடுத்த கணமே மறந்து விடுகிறோம். அப்பர் சுவாமிகள், 'நான் பற்றுக் கோடின்றி இவ்வளவு காலம் வாழ்ந்துவிட்டேன்; பட்டால் அறிவு பெறும் கயவனைவிடக் கீழானவனாக, இடும்பை வந்தும் எள்ளளவும் ஞானம் பெறாமல் வாழ்கி றேன். இனி என் செய்வேன்!' என்று சொல்வது அவர் திறத்தில் எத்துணை பொருத்தமோ, அதனை ஆராய நமக்கு ஆற்றல் இல்லை. ஆனால் நம் திறத்தில் இது அத்தனையும் பொருத்தம் என்பதில் சிறிதும் ஐயமில்லை, நமக்கு ஒன்றைப் பற்றவும் தெரியாது; பற்றிக்கொண்டு வாழவும் தெரியாது; பாழுக்கு இறைப்பதன்றி வேறு ஒன்றும் நம் வாழ்க்கையில் இல்லை. சில சமயங்களில் துன்புறும்போது அறிவு மின்ன லைப் போலப் பளிச்சிடுகிறது. மறுகணமே மறந்து போகி றது. ஆகவே இடும்பை வந்தும் நமக்கு ஞானம் வருவதாகத் தோன்றவில்லை.இந்த நிலையில் நம் துயரைக் களையுந் துணை இன்னர் என்ற அறிவு எங்கே வரப்போகிறது? ஆதலின் அப்பர் சுவாமிகள் இந்தப் பாட்டை நமக் காகவே பாடிக் கொடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. நாம் இதைப் பாடி இதன் கருத்தை உணர்ந்து களைகண் ணைத் தேடிக் கொள்ளலாமே !
பக்கம்:இரவும் பகலும்.pdf/62
Appearance