54 இரவும் பகலும் பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்; 'உற்றலால் கயவர் தேறார்' என்னும் கட் டுரையோடு ஒத்தேன்; எற்றுளேன்? என்செய் கேன் நான்? க இடும்பையால் ஞானம் ஏதும் கற்றிலேன்; "களைகண் காணேன். கடவூர்வீ ரட்ட னீரே! ? (திருக்கடவூர் வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் அமுத கடேசரே! ஒரு பற்றுக்கோடும் இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து, பயனில்லாமல் பாழுக்கே நீரை இறைத்தேன்; 'துன்பம் வந்தா லன்றி இழிகுணத்தோர் உண்மையைத் தெளியமாட்டார்' என்று உலகத்தோர் சொல்லும் பழமொழிக்கு ஒப்ப இருந்தேன். நான் எதற்காக உயிரோடு இருக்கிறேன்? என்ன செய்வேன்? நான் அடைந்த துன்பங்களால் சிறிதளவும் அறிவைப் புதியதாகத தெரிந்து கொள்ளவில்லை. என் துன்பங்களைப் போக்கும் துணை யையும் கண்டிலேன். பற்று - பற்றுக்கோடு. பாழுக்கே நீர் இறைத்தேன் என்பது குறிப்பு: என் முயற்சிகள் யாவும் எனக்கு ஒரு பயனும் தாராத வகையில் வர்ழ்ந்தேன் என்ற கருத்துடையது. உற்று அல்லால்; உறுதல் - துன்பம் அடைதல்; அதனால் ஊறு என்பது துன்பத் துக்கே ஒரு பெயராயிற்று. தேறார் - தெளியார்; தம் ஆற்றலுக்கு அப்பாற் பட்டனவும் உண்டு என்பதைத் தெளியமாட்டார். கட்டுரை - சொல்; பழமொழி. கட்டுரையோடு ஒத்தேன் - கட்- டுரைக்குப் பொருத்தமானவன் ஆனேன். எற்று - எதற்காக. உளேன் - உயிரோடு இருக்கிறேன். செய்கேன் செய்வேன். இடும்பை - துன்பம். ஏதும் - சிறிதும்.களைகண் - துன்பந் துடைக் கும் துணை. வீரட்டனார் என்பது விளி ஏற்று வீரட்டனீரே என்ற யிற்று. அறிவுடையாரை விளிக்கும்போது அறிவுடையீரே என்று வருதல் போன்றது இது.) இது 31-ஆம் பதிகத்தின் எட்டாம் பாட்டு.
பக்கம்:இரவும் பகலும்.pdf/63
Appearance