-> ஆவி வாழும் வீடு சின்ன வீட்டை ஒருவர் கட்டினார்; மண்ணினால் எடுத்த வீடு; கூரை வேய்ந்த வீடு. மரம், மண், தென்னங் கீற்று இந்த மூன்றையும் வைத்துக்கொண்டே அவர் இதைக் கட்டிவீட்டார். இந்த வீட்டைச் சுற்றிப் பார்த் தால், பூமியிலே இது நிற்பதற்கும், நிழல் தருவதற்கும் என்ன என்ன பொருள்கள் இருக்கின்றன என்பதை எளிதிலே கண்டுகொள்ளலாம். வீட்டின் கூரையைத் தாங்க முக்கியமாக இரண்டு கால்களை நட்டிருந்தார். இரண்டு பக்கமும் கை மரங்களை வைத்து அவற்றின் குறுக்கே வரிசையாகக் கோல்களைப் பரப்பினார். சுற்றிச் சுவரெடுத்திருந்தார். மண்ணையும் தண்ணீரையும் கலந்து குழைத்த சுவர் அது. மேலே கூரை வேய்ந்திருந்தார். இந்தச் சின்ன வீட்டுக்கு முன் வாசல் ஒன்று, பின் வாசல் ஒன்று.ஏழு சன்னல்கள் வைத்தார். இதற்கு மேல் அந்த வீட்டுக்கு வெள்ளையடித்து வர்ணம் பூசி அழகு படுத்தினார். அதைக் கட்டும்போது பார்த்தால் கண்ணுக்கு நன்றாகவே இருக்கவில்லை.இப்போது கட்டி முடிந்த பிறகு பார்த்தால் வீடு கண்ணைப் பறிக்கிறது. உள்ளே ஒருவரைக் கொண்டு வந்து குடியும் வைத்து விட்டார். அவர் மகா சாமர்த்தியக்காரர். குடிபுகுந்தவர் அல்ல: வீட்டைக் கட்டினவரைச் சொல்கின்றேன். திருநாவுக்கரசர் இதுபோன்ற ஒரு வீட்டைப் பற்றிச் சொல்கிறார். அந்த வீட்டைக் கட்டினவர் ஒருவர். குடியிருப் பவர் ஒருவர். ஆனால் குடியிருக்கிறவர் அதனைத் தம்முடைய
பக்கம்:இரவும் பகலும்.pdf/64
Appearance