56 இரவும் பகலும் . தாக நினைந்து ஏமாந்து போகிறார். எந்தச் சமயத்திலும் அவர் அந்த வீட்டை விட்டு ஓடிப் போகவேண்டியிருக்கும். அதை மறந்துவிட்டு அந்த வீட்டுக்கு அலங்காரம் செய்து, அழகு பார்க்க ஆரம்பிக்கிறார். தாம் அதில் வாழ்கிறவரைக் கும் சுத்தமாக வைத்துக் கொண்டால் போதாதோ? அது தாமே கட்டினது போலவும், தமக்கே உரியது போலவும் எண்ணிக்கொண்டு அந்த வீட்டை அலங்காரம் செய்யத் தொடங்குகிறார். அது மாத்திரம் அல்ல. வீட்டுக்கு எசமானர் ஒருவர் இருக்கிறார் என்பதையே அடியோடு மறந்துவிட்டு, அதற்குக் கொடுக்க வேண்டிய வாடகையை யும் கொடுக்காமல் காலம் கழிக்கிறார். . வீட்டுக்காரர் - அந்த வீட்டைக் கட்டித் தந்தவர்- குடியிருக்கிறவரைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். 'இந்த மனிதன் இந்த வீட்டிலே இருந்துகொண்டு தான் செய்ய வேண்டிய வேலைகளை ஒழுங்காகச் செய்யட்டும் என்று இதைக் கட்டிக் கொடுத்தேன். இவன் வீட்டை அழகு படுத்துவதிலே காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறானே' என்று நினைக்கிறார். அவர் இந்த ஒரு வீட்டை மாத்திரமா கட்டுகிறார்? கோடிக்கணக்கான வீடுகளைக் கட்டி அங் கங்கே மனிதர்களைக் குடி வைத்திருக்கிறார். சிலர் வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொண்டு பல நாள் அதில் வாழ்கிறார்கள். வேறுசிலருடைய வீடுகள் அடிக் கடிபழுதுபட்டுப் போகின்றன. மழைக்கு ஒழுகுகின்றன. எலி, பெருச்சாளிகளின் தொந்தரவு வேறே. ஒருவரை ஒரே வீட்டில் இருக்கும்படி விடுவதில்லை அந்த முதலாளி. மாற்றி மாற்றிப் புதிய புதிய வீடு கட்டிக் கொடுக்கிறார். பழைய வீடுகளை இடித்துத் தள்ளி விடுகிறார். அதை இடிக்கிறபோது மனிதர்கள் கண்டு, "ஐயோ! இவ்வளவு நாளும் வாழ்ந்த வீட்டை இடிக்கிறாரே!" என்று வருந்துகிறார்கள். அழக்கூட
பக்கம்:இரவும் பகலும்.pdf/65
Appearance