ஆவி வாழும் வீடு 57 அழுகிறார்கள். முதலாளி வேறு வீட்டில் குடியேற்றி விடுகிறார். இப்படியெல்லாம் நிகழும் வீடு இன்னதென்று இதற்குள் உங்களுக்குத் தெரிந்திருக்கும். உயிர் வாழும் உடம்பைத்தான் அப்பர் சுவாமிகள் வருணிக்கிறார். இந்த வீட்டை மறைக்காட்டிலே இருக்கிற முதலாளி கட்டினார். ஆவியை இந்த வீட்டிலே குடிவைத்து, வாழும்படி செய்தார். இந்த வீட்டுக்கும் கால்கள் உண்டு. மற்றவர்கள் கட்டும் வீடுகள் ஒரே இடத்தில் உள்ள வீடுகள். இந்த வீடோ அங்கும் இங்கும் செல்லும் வீடு. மேல் நாடுகளில் இடம் விட்டு இடம் மாறும் வகையில் சில வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள் என்று பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. இந்த வீடும் அந்த வீடுகளைப் போல இயங்கும் வீடு. இரண்டு கால் படைத்த வீடு இது. இரண்டு கைகளும் உண்டு. வீட்டுக்கு இரண்டு பக்கமும் அமைக்கும் கை மரங்களைப் போல இவை இருக்கின்றன.குறுக்கே போடும் கழிகளைப் போல் இங்கும் எலும்புகளை அடுக்கியிருக்கிறார். அவற்றிற்கு மேலே ஊனை வேய்ந் திருக்கிறார். அதற்கு மேல் தோலைப் பரப்பி மூடியிருக்கிறார். சுவர் எடுக்கத் தண்ணீர் வேண்டும். இங்கே உதிரம் என்ற நீரைக் கொண்டு தசைகளைக் குழைத்துச் சுவர்களை எடுத் திருக்கிறார். இதற்கும் மலஜலம் கழிக்கும் இரண்டு வாசல்கள் இருக்கின்றன. கண் இரண்டு, காது இரண்டு, மூக்குத் துளைகள் இரண்டு, வாய் ஒன்று ஆக ஏழு ஜன்னல்கள் வைத்திருக்கிறார். இதிலே குடியிருக்கிறவர் ஆவி (உயிர்) என்பவர். ஊனும் எலும்பும் தோலும் கொண்டு இந்த வீட்டைக் கட்டினார். ஆனால் ஊன் முதலியவற்றைத் தனித் தனியே கண்டால் எத்தனை அருவருப்பாக இருக்கிறது! எலும்பும் இறைச்சியும் இரத்தமும் ஒரே குவியலாக வைத்திருந்தால்
பக்கம்:இரவும் பகலும்.pdf/66
Appearance