உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இரவும் பகலும் பயமாகக்கூட இருக்கும். முதலாளியின் சாமர்த்தியம் இந்த வீட்டைக் கட்டுவதிலே கூட அதிகமாகப் புலப்படவில்லை. இவ்வளவு அழகற்றதும், அருவருக்கத்தக்க பண்டங்களை வைத்துக் கட்டினதும் ஆகிய வீட்டைக் கொஞ்சங்கூட அருவருப்பு இல்லாமல் பார்க்கப் பார்க்க அழகாகத் தோன் றும்படி பண்ணிவிட்டார்; அதுதான் ஆச்சரியம்! இதைக் கண்ட மற்றவர்கள் இந்த வீட்டினிடம் ஆசை கொள்ளு கிறார்கள். உள்ளே வாழ்கிறவனோ, விடமாட்டேன் என் கிறான். அத்தனை மோகம் இதன்மேல். இப்படி இதனிடம் ஒரு விதமான கவர்ச்சியை வைத்திருக்கிறார் மறைக்காடனார். கண்டு மயங்கும்படி உள்ள இந்த வீட்டிலே வாழ ஆவிக்கு ஆசை அளவற்ற தாக இருக்கிறது. 'வெறும் குருதியும் நரம்பும் எலும்பும் கூடின கூட்டந்தானே இந்த உடம்பு? என்ற நினைவு யாருக்கும் வருவதில்லை இதனிடம் தனி மோகங்கொண்டு அழகு செய்கிறார்கள். மற்றவர் உடம்பைக் கண்டும் மால் (ஆசை) கொள்ளுகிறார்கள். இந்த மாலை வைத்தது நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. கால்கொடுத்து இருகை ஏற்றிக் கழிநிரைத்து இறைச்சி மேய்ந்து தோல்படுத்து உதிர நீரால் சுவர்எடுத்து இரண்டு வாசல் ஏல்வுடைத் தாஅ மைத்து அங்கு ஏழுசா லேகம் பண்ணி மால்கொடுத்து ஆவி வைத்தார் மாமறைக் காட னாரே. (பெருமையை உடைய திருமறைக் காட்டில் எழுந்தருளி யிருக்கும் இறைவர், காலைக் கொடுத்து. இரண்டு கையை அமைத்து, கழிகளை வரிசையாக வைத்து, மாமிசத்தால் வேய்ந்று, தோலைப்பரப்பி,இரத்தம் என்ற நீரால் குழைத்துச் சுவரை எடுத்து, இரண்டு வாசல்களைப் பொருத்தமுடையனவாக அமைத்து, அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/67&oldid=1726809" இலிருந்து மீள்விக்கப்பட்டது