உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளும் அருளும் "ஐயா, பிச்சை!" என்று கதறுகிறான் பிச்சைக் காரன். "ஒரு வருஷமாக வேலையில்லாமல் அல்லற்படு கிறேன்.ஏதாவது உதவி செய்யவேண்டும்" என்று யாசிக் கிறார் ஒருவர். வெளிப்படையாகப் பிறருக்குத் தெரியாமல் சில பேர் தம்முடைய யாசகத் தொழிலைக் கௌரவமாக நடத்தி வருகிறார்கள். எப்படியோ இறைவன் அத்தனை பேருக்கும் படியளந்து கொண்டுதான் இருக்கிறான். மகாத்மா காந்தியடிகள் செல்வர்களைப்பற்றி ஒன்று சொல்வதுண்டு. செல்வத்தை நம்முடைய சொந்த நன்மைக் காகவே இறைவன் தந்ததாக எண்ணிப் பிறருக்கு உப காரம் செய்யாமல் வாழக்கூடாது. முதலாளிகளெல்லாம் தம்மிடம் இருக்கும் செல்வத்துக்குத் தாங்களே உரிமை யாளர் என்ற நினைப்பொழிந்து தர்மகர்த்தாக்கள் என்ற முறையில் வாழவேண்டும். அப்படி இருந்தால் நாட்டில் பொருளாதார இடைஞ்சலால் மக்கள் துன்புறவேண்டிய நிலை இராது' என்று சொல்வது வழக்கம். பொருளுக்கு உரிமை கொண்டாடுவது கூடாது, அதைப் பிறருக்கும் வழங்கவேண்டும் என்ற இந்தக் கருத்தையே இந்த நாட்டில் பலகாலமாகப் பெரியோர்கள்வற்புறுத்திவந்திருக்கிறார்கள். ஒரு செல்வர் தம்முடைய பிள்ளைகளில் ஒருவனிடம் நிறையச் செல்வத்தைக் கொடுத்து, அப்பா,இதை நன்றா கப் பாதுகாத்து உனக்கு வேண்டியதைப் பயன்படுத்திக் கொண்டு உன் சகோதரர்களுக்கும் கொடுத்து வாழ்வா யாக என்று சொல்லிச் செல்கிறார். அந்த மனிதன் அந்தச் சொத்து மற்றவர்களுக்கும் உரியது என்பதை "

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/69&oldid=1726811" இலிருந்து மீள்விக்கப்பட்டது