உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளும் அருளும் 61. மறந்துவிடுகிறான். அதைவிட ஆச்சரியம், அதைத் தன் தந்தையார் வழங்கினார் என்பதையும் மறந்து போகிறான். செல்வம் முழுவதையும் தானே பயன்படுத்திக் கொள் கிறான். இது முறையாகுமா? உலகில் பிறருக்கு உதவாத செல்வர்கள் இந்த முறையற்ற செயலையே செய்கிறார்கள். . நல்லவர்கள் தாம் பெற்ற செல்வம் இறைவன் தந்த தென்று கருதி அறம் செய்வார்கள். இறைவன் செல்வர் களிடம் அவர்களுக்கே உரிமையாகப் பொருளைக் கொடுக்க வில்லை. நான்கு பேருக்குப் பயன் படும்படி பொதுவான இடத்தில் ஒரு பொருளை வைப்பதுபோல வைத்திருக்கிறான். இரக்கின்ற ஏழையருக்கு ஈயும் பொருட்டு அதை வைத் திருக்கிறான். இரப்பவர்க்கு ஈய வைத்தார். [வறுமையினால் செல்வர்களிடம் வந்து ஈ என்று இரப்பவர் களுக்குக் கொடுக்கும் பொருட்டாகவே அச் செல்வர்களிடம் பொருளை வைத்தார்.] . இரப்பவர்களிடம் இறைவனுக்குக் கருணை இருப்ப தானால் அவர்களிடமே பொருளைக் கொடுத்துவிடலாமே என்று தோன்றும். பல தொழிலாளர்கள் வேலை செய்தா லும் அவர்களுக்குள் ஆற்றலால் உயர்ந்தவனைத் தலைவனாக வைத்து அவனை ஏவும் அதிகாரியாக நியமிப்பதுபோல, புண்ணியம் செய்தவர்களுக்குப் பொருளை அளித்து ஏனைய வர்களுக்கு அளிக்கும்படி வைத்தான் இறைவன். இரப் பவன் கொடுப்பவனைக் கண்டு, தம் இருவருக்குள்ளும் அமைந்த வேறுபாட்டுக்கு முற்பிறப்பிற் செய்த பாவ புண் ணியங்கள் காரணம் என்ற உணர்ச்சி பெற்றுப்புண்ணியச் செயல்களைச் செய்யும் நாட்டமுறுவான் அல்லவா? ஆகவே இரப்பவனுக்கு இழிநிலை இருந்தாலும் அதனால் வரும் துன் பத்தினின்றும் நீங்கும்படி அவனுக்குக் கொடுக்க ஒருவனை வைத்திருக்கிறான் இறைவன். கொடுக்கும் நிலையையுடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/70&oldid=1726812" இலிருந்து மீள்விக்கப்பட்டது