உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இரவும் பகலும் யவன். சென்ற பிறவிகளிலே நல்வினை செய்தமையால் இந்தப் பிறவியிலே செல்வத்தைப் பெற்றான். இப்போது அச் செல்வத்தை இரப்பவர்களுக்கு ஈகிறான். இந்த ஈகைக் குப் பயன் என்ன? தம் பிள்ளையினிடம் கொடுத்த சொத் தைப் பிற பிள்ளைகளுக்கும் பகிர்ந்தளித்து வாழ்ந்த மூத்த மகனிடம் தந்தைக்கு அன்பு உண்டாகும். அப்படியே இரப் பவருக்கு ஈதலைத் தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்தவ னுக்கு இறைவன் இந்தச் செல்வத்தினும் மேலான செல்வத் தைத் தருகிறான்; அருளை வழங்குகிறான்.அந்த அருளா ஆகாதது ஒன்றும் இல்லை. அதனினும் சிறந்த ஊதியமும் இல்லை. ஈபவர்க்கு அருளும் வைத்தார். [தாம் வைத்த பொருளை இரப்பவர்க்கு அளிக்கும் செல்வர் களுக்கு, அந்த ஈகையின் விளைவாகத் தம் அருளை வழங்கினார். ஈதல் - உயர்ந்தோர் இழிந்தாருக்கு அளித்தல், இரப்பவர்களுக்கு அளிக்க ஈபவர்களிடம் பொருளை பொருளை வைத்ததுபோல, ஈபவர் களுக்கு அளிக்கத் தம்மிடம் அருளை வைத்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.] இரப்பவர்களுக்கு ஈயும்பொருட்டுத் தம்மிடம் இறை வன் பொருளை அளித்திருக்கிறான் என்ற உணர்ச்சியின்றி அவற்றைப் பிறருக்கு ஈயாமல் மறைத்து வைக்கிறார்களே, அவர்களை இறைவன் என்ன செய்வான்? அவர்களுக்கு நரக வாழ்வைக் கொடுக்கிறானாம்,நல்வினை செய்வார்க்கு இன்ப வாழ்வாகிய சொர்க்கத்தையும் தீயன புரிவார்க்குத் துன்ப வாழ்வாகிய நரகத்தையும் வகுத்திருக்கிறான் அவன். மற்றத் தீவினைகள் செய்பவர் அடையும் நரகங்கள் ஒரு வகை,தம் மிடம் இறைவன் வைத்த பொருளை உரியவர்களுக்குக் கொடுக்காமல் மோசம் செய்கிறவர்களாகிய களுக்கோ கடுமையான நரகங்களை வைத்திருக்கிறானாம். லோபியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/71&oldid=1726813" இலிருந்து மீள்விக்கப்பட்டது