பொருளும் அருளும் 63 கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடுநர கங்கள் வைத்தார். (தம்பால் உள்ள பொருள் இரப்பவர்களுக்கு ஈயும்பொருட்டு இறைவனால் வைக்கப்பெற்றது என்பதை உணராமல், அதனைப் பிறருக்குக் கொடுக்காமல் மறைக்கிறவர்கள யாவருக்கும் கடுமை யான நரகங்களை அமைத்தார். கரப்பவர் - இரப்பவருக்குக் மறைத்து வைக்கும் லோபிகள் ] கொடுக்காமல் தம் பொருளை ஈகையால் வரும் நன்மையையும், லோபத்தால் வரும் தீமையையும் பொது வகையிலே சொன்ன அப்பர் சுவாமி கள் உதாரணமுகத்தால் அவற்றை விளக்க வருகிறார். கங்கையிடம் நிறைய நீர் இருக்கிறது. அது வற்றாத ஆறு. பரந்து விரிந்த நீரை உடையது. நீராடுவாருக்கும் குடிப்பவருக்கும் பயன்படும்பொருட்டே அந்த நீர் இருக் கிறது. இறைவன் திருவருளால் குறைவில்லாத நீரைப் பெற்றிருக்கிறது கங்கை அதற்குத் தன்பால் உள்ள செல்வமாகிய நீர், இரப்பவர்க்கு ஈயும் பொருட்டு இறைவன் வைத்தது என்ற நினைப்பு ஒருகால் இல்லாமற் போயிற்று. பகீரதன் வந்து கங்கையை இரந்தான். அவனுக்கு ஈய மனம் வராமல் ஏதோ சாக்குப் போக்குச் சொன்னாள் கங்காதேவி. இறைவன் கங்கையின் லோபத்தனத்தை உணர்ந்தான். பரந்து விரிந்து நின்ற கங்கை, தன் மனம் போனபடி அலைவீசி ஓடிய கங்கை, சிறைக்குட்பட்டது போலத் தன் சடையிலே ஒரு மூலையில் அடங்கி முடங்கிக் கிடக்கும்படி வைத்துவிட்டான். கங்கைக்கு அது பெரிய தண்டனை அல்லவா?
பக்கம்:இரவும் பகலும்.pdf/72
Appearance