உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இரவும் பகலும் பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார். [பரப்பாக விரிந்த நீரை உடைய கங்கையைப் படர்ந்த சடா பாரத்தின் ஒரு பகுதியிலே வைத்தார். பாகம் - பகுதி.) ஈயாத லோபிக்கு இறைவன் தரும் தண்டனைக்கு இது சிறந்த உதாரணம். பொருளைப் படைத்த செல்வர்கள் ஈயென்று கேட் டால் கொடுக்க வேண்டுமென்றால், இறைவன் அருளைப் படைத்த செல்வனாயிற்றே; அவனைக் கேட்டால் அதைத் தருவானா? ஊராருக்கு ஒரு நீதி,தமக்கு ஒரு நீதி" என்று வாழும் தலைவர்களைப் போன்றவன் அல்ல அவன். என்றும் குறையாத பேரருளாகிய செல்வத்துக்கு உரிமையாளன் அவன். அதை அவன் கேட்டவர்களுக்கெல்லாம் கொடுக் கும் பெருவள்ளல். முன்பு தனக்கு ஆகாதனவற்தைச் செய்துவிட்டுப் பின்பு வந்து ஈயென்று கேட்டாலும் அவனுடைய முன்னைச் செயல்களை மறந்துவிட்டு, இப்போது வந்து இரப்பது ஒன்றையே கருதி அருளை வழங்கும் பெருந்தன்மையை உடையவன் அவன். அதற்கு உதாரணம் வேண்டுமா? இராவணன் வான் வழியே தன் தேரைச் செலுத்திச் சென்றான். கைலை மலையின்மீதே அந்தத் தேர் செல்ல வில்லை. தன் தேரின் போக்குக்குத் தடையாக உள்ள கைலைக் குன்றத்தைப் பெயர்த்து எடுத்துவிடலாம் என்று அவ்வரக்கன் முயன்றான். இறைவன் மெல்லத் தன் கால் விரல் ஒன்றை அழுத்தினான். இராவணன் கைலையின் கீழே நசுங்கினான். அப்போது அவன் இறைவனைச் சாமவேதத் தால் பாடி இரந்தான். 'செருக்குற்று நம் மலையை எடுத் தவன் அல்லவா இவன்? என்று அவனுடைய தீய செயலை ་

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/73&oldid=1726815" இலிருந்து மீள்விக்கப்பட்டது