பொருளும் அருளும் 65 நினையாமல், அவன் இசை பாடி இரந்ததற்கு இரங்கி, இறைவன் அவனுக்கு உடைவாளும் முக்கோடி வாழ் நாளும் வழங்கினான். வழங்கினான். இதைக் காட்டிலும் பேரருள் உண்டா? அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன்ஐ யாறனாரே. [அரக்கனாகிய இராவணனுக்கும் அருளை வழங்கினார், யிருக்கும் மேலானவராகிய திருவையாற்றில் எழுந்தருளி இறைவர். அரக்கனுக்கும் அருள் வைத்தார் என்று உம்மையைப் பிரித்துக் கூட்டவேண்டும். ஐயன் - தலைவன். ஐயாறனார் - திருவை யாறு என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவர்.) ரப்பவருக்குக் கரவாமல் ஈயும் வண்மையாளருக்கு இறைவனும் தன்பாலுள்ள அருளைக் கரவாமல் ஈகிறான். கரப்பாருக்கு இன்னல்களை விளைவிக்கிறான். அவனுடைய அருஞ்செயல்களின் மூலமாகவும் இந்த ணர்ந்து கொள்ளலாம். இரப்பவர்க்கு ஈய வைத்தார்; ஈபவர்க்கு அருளும் வைத்தார்; கரப்பவர் தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்; பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் படர வைத்தார் ; அரக்கனுக்கு அருளும் வைத்தார்; ஐயன்ஐ யாற னாரே. திருவையாறு சோழநாட்டில் முறையை உள்ள தலங்களில் ஒன்று. இங்கே அப்பர் சுவாமிகளுக்கு மிகுதியான ஈடுபாடு உண்டு. இது 38- ஆம் பதிகத்தின் கடைசிப் பாட்டு. இ5
பக்கம்:இரவும் பகலும்.pdf/74
Appearance