80 இரவும் பகலும் அணிவதாதலின் கண்டி என்ற பெயர் வந்தது. மகர கண்டி, பொற்கண்டிகை என்று வழங்குவதைக் காண்க. கழுத்தில் அணியும் மாலைகள் பலவற்றிலும் சிறந்தது ருத்திராட்சம். சிறந்த ஒன்றை அடையின்றிச் சொல்வது உலக வழக்கு. பூ என்று சொன்னால் எல்லாப் பூக்களிலும் சிறந்த தாமரைப் பூவையே குறிக்கும். எவ்வித அடையும் இன்றிக் கண்டி என்றால் எல்லாவற்றினும் சிறந்த ருத்தி ராட்சத்தைக் குறிக்கும். இறைவனுடைய திருக்கழுத்தில் கண்டி அழகு செய்கிறது. இறைவன் தனக்கு ஓர் அணி அணியும் அவசியம் இல்லாதவன் ; உருவமே இல்லாதவன். ஆயினும் அவன் உருவத்துக்குள் அமைந்து அன்பர் களுக்குக் காட்சி தருகிறான். அந்தத் திருமேனி பல ஆடை களுக்குள்ளும் அணிகளுக்குள்ளும் அமைந்து விளங்கு கின்றது. அவன் திருக்கழுத்துக் கண்டிக்குள்ளே பொருந்தி இலங்குகிறது. கண்டியுட் பட்ட கழுத்துடையீர் ! (ருத்திராட்ச மாலையைப் புறத்தே அணிந்து அதற்குள் அமைந்து திகழும் திருக்கழுத்தை உடையவரே 1 கண்டி - ருத்திராட்சமாலை. உட்பட்ட - அதனைப் புறத்தே அணிந்து அதற்குள் தான் பொருந்தித் தோன்றிய.) இறைவன் வீடுதோறும் பிச்சை வாங்கி உண்கிறா னாம். தன்னை நாடி வந்து அன்பு செய்ய வேண்டிய உயிர் களுக்கு, அந்தச் சிரமத்தைக் கொடுக்காமல் அவர்களை நாடிச் சென்று அன்பாகிய பிச்சை கேட்கிறான். அந்தப் பிச்சையை ஏற்கும் பாத்திரம் பிரமகபாலம்; பிரமனுடைய மண்டையோடு. உயிர்களின் பிறப்புக்கும் வாழ்க்கைக்கும் இறப்புக்கும் மூலக் கருவாக நிற்பது வினை ; அதை விதி யென்றும் சொல்வதுண்டு. அந்த விதியின் அடையாள மாகிய எழுத்து, தலையில் இருப்பதாகச் சொல்வது ஒரு
பக்கம்:இரவும் பகலும்.pdf/89
Appearance