விண்ணப்பம் 81 மரபு; தலையெழுத்து என்று சொல்வார்கள். கபாலத்தைக் கண்டவர்கள் தலையெழுத்தை நினைத்துக்கொள்வார்கள். உடம்புகள் எரிந்து கரிந்து எலும்பாகும் கரிகாட்டில் எலும்புகள் உடம்பு நிலையாது என்ற உண்மையைக் காட்ட, கபாலம் எல்லாவற்றிற்கும் காரணமான விதியை நினைப்பூட்டுகிறது. விதிப்பவன் பிரமன். உயிர்கள் செய்யும் வினைகளுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை நுகரும்படி அமைக்கும் வரையறையே விதி. அந்தக் கணக்கைப் பார்த்து எழுதும் கணக்கப்பிள்ளை பிரமன். அதனால் அவனுக்கு விதி என்றே ஒரு பெயர் உண்டு. அவன் எல்லார் தலையிலும் எழுதுகிறான்; அவன் தலையில் எழுது கிறவன் இறைவன். விதிக்கும் விதியாக நிற்பவன் இறை வன். பிரமனைப் பிறவியைத் தரும் கடவுள் என்று சொல் கிறோம்."அப்பா, உன் தலையெழுத்தை எழுதும் பிரமாவின் தலையெழுத்து என் கையில் அமைந்திருக்கிறது. அவனையே அழித்துத் தலையோட்டைத் திருப்பிவிட்டேன். அவனால் வரும் பிறவி நோயையும் தீர்ப்பேன். நீ உன் அன்பைத் தா' என்று கேட்கிறான் இறைவன். " உடம்பு ஒரு வண்டியைப் போன்றது. உயிர் வாழ்க்கையை ஜீவயாத்திரை என்று சொல்வதுண்டு. யாத்திரைக்கு வண்டி வேண்டாமா? ஆகவே இதை அப்பர் சுவாமிகள் வண்டி என்றே சொல்கிறார். பழுதுபட்ட வண்டியை மூலையிற் போட்டுவிடுவார்கள். இந்த வண்டியைச் சுடுகாட்டில் எரித்துவிடுவார்கள். அப்போது எரியாமல் எஞ்சி நிற்பது மண்டையோடு; கபாலம். அதை இறைவன் தன் பிச்சைப் பாத்திரமாக, பரிகலமாகத் திருக் கரத்தில் ஏற்றுக் கொண்டிருக்கிறான். -6 . கரி காட்டில் இட்ட ...... பண்டியிற் பட்ட பரிகலத்தீர்!
பக்கம்:இரவும் பகலும்.pdf/90
Appearance