இரவும் பகலும் (சுடு காட்டிலே கொண்டு போய் இட்டுக் கொளுத்தின உடம் பாகிய வண்டியில் அமைந்திருந்த கபாலமாகிய பாத்திரத்தை உடையவரே கரிகாடு - கரியும் காடு; சுடு காடு. பண்டி - வண்டி. பட்ட அமைந்த; தோன்றிய எனலும் ஆம். பரிகலம் - பாத்திரம்; இறைவன் திருக்கரத்தில் உள்ள பிரமகபாலத்தைச் சுட்டியபடி.] 5. இறைவன் கருணைக்கு அடையாளமாக இருப்பது ருத்திராட்சம். அவனுடைய அழியாமைக்கும், பிறப்பை அறுக்கும் ஆற்றலுக்கும், எளிமைக்கும் அடையாளமாக இருப்பது கபாலம்.கருணையும் பிறப்பறுக்கும் வன்மையும் ஆருயிர்களின்பால் எளியனாக வந்து வலிய அருள் செய்யும் பெருமையும் உடைய இறைவனிடத்திலே ஒரு விண்ணப்பம் செய்துகொள்ளுகிறார் அப்பர்.'இறைவரே! உம்மை மறந்தாலும் தேவரீர் என்னை மறவாமல் ஆட்கொள்ள வேண்டும்" என்று வேண்டிக்கொள்கிறார். நான் மனிதன் சுகத்தை நுகரும்போது அதைத் தனக்கு வழங்கியவனை மறந்துவிடுகிறான். நன்றாக வயிறாரச் சாப்பிட்டால் அந்த நிறைவிலே ஒரு விதமான மயக்கத்தை அடைந்து நினைக்க வேண்டிய கடவுளை மறந்து போகிறான் உணவு கிடைக்காத பட்டினியில் அவன் வாடும் போதும் இறைவன் நினைப்பு வருவதில்லை. பசியினால் அல்லற்படும்போது, சோறு, சோறு" என்று பறக்கிறான். அவனுக்குச் சோற்றைத் தவிர வேறு ஒன்றுமே நினைவில் இருப்பது இல்லை. ஆகவே பட்டினி கிடக்கும்போதும் இறைவனை மறந்து விடுகிறான். அப்படியே நோயால் தவிக்கும்போதும் அந்த நோயால் வரும் துன்பத்திலே வாடி, து தீருமா என்ற நினைப்பையன்றி வேறு எண்ணாமல் இருக்கிறான். அப்போதும் இறைவனை நினைப்பதில்லை.
பக்கம்:இரவும் பகலும்.pdf/91
Appearance