உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்ணப்பம் 83 தூங்கும்போது எல்லாவற்றையும் மறந்து போகிறான் மனிதன். 'யமனுடைய தலை வாசலில் நிற்கிறோமே' என்ற கவலை இருந்தால் அவன் தூங்குவானா? 'யமனால் வரும் துன்பத்தைப் போக்கும் இறைவன் அருளை இன்னும் பெறவில்லையே!' என்ற ஏக்கம் இருந்தால் அவன் தூங்க முடியுமா? அவற்றையெல்லாம் நினைக்காமலே அவன் தூங்குகிறான். இவ்வளவுக்கும் காரணம் என்ன? மனிதன் ஐந்து பேர்களுக்கு அடிமையாக இருக்கிறான். அந்த ஐந்து பேர்களும் அவனைக் கொள்ளையடிக்கிறார்கள். அவனிடத்தில் சிறிதளவு பக்தி தோன்றினாலும் அதை உடனே கைப்பற்றி மறைத்துவிடுகிறார்கள். எந்தக் காலத்திலும் மனிதனுக்கு விரோதிகளாக, அவன் துன்புற் றாலும் இன்புற்றாலும் அவனுடன் இருந்து அவனை அலைத்து அவன் வாழ்வை நரகமாக்கிவிடுகிறார்கள். அவர் கள் அடிக்கிற கொள்ளையில் இறைவனை நினைக்கவே முடியாது. அந்த ஐவர் மெய் வாய் கண் மூக்குச் செவி யாகிய ஐந்து பொறிகள். இந்திரியங்களாகிய இவர்களை அடக்காமல் மனிதன் உய்வது என்பது இயலாத காரியம். இவற்றையெல்லாம் எண்ணி அப்பர் இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறார். 'கருணையும் எளிமையும் உடைய பெருமானே! உம்மை நான் மறவாமல் நினைக்க முடிவதில்லை. உண்டாலும் மறக்கிறேன். பட்டினி கிடந் காலும் மறக்கிறேன். நோய்வாய்ப்பட்டாலும் மறக் கிறேன். உறங்கினாலும் மறந்து போகிறேன். ஐவர்கள் அடிக்கும் கொள்ளையிலே பட்டு மறக்கிறேன். இப்படி ஓரவொட் டார்ஒன்றை உன்னவொட் டார்மலர் இட்டு தாள், சேரவொட் டார்ஐவர் செய்வதென் யான்" என்று சுந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் முறையிடுவது இங்கே நினைவுக்கு வருகிறது.

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/92&oldid=1726836" இலிருந்து மீள்விக்கப்பட்டது