84 இரவும் பகலும் உம்மை நினைக்காமல் மறந்தாலும் தேவரீர் அடியேனை மற வாமல் திருவுள்ளத்திற் கொண்டருள வேண்டும்" என்று சொல்கிறார்; திருவீழி மிழலையில் திருவீழி மிழலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானிடம் கூறுகிறார். கண்டியிற் பட்ட கழுத்துடை யீர்!கரி காட்டில் இட்ட பண்டியிற் பட்ட பரிகலத் தீர்/பதி வீழிகொண்டீர்! உண்டியில், பட்டினி, நோயில், உறக்கத்தில், உம்மைஐவர் கொண்டியிற் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே! [ருத்திராட்சம் அணிந்த திருக்கழுத்தை உடையவரே! பிரம கபாலத்தைத் தரித்தவரே! இருக்கும் இடமாகத் திருவீழிமிழலை யைக் கொண்டவரே! அடியேன் உணவு உண்ணும் போதும் பட்டினியிலும் நோயிலும் உறக்கத்திலும் ஐம்பொறிகள் இடும் கொள்ளையிலே அகப்பட்டுத் தேவரீரை மறந்தாலும் தேவரீர் அடி யேனை மறவாது நினைத்துக்கொள்ளுங்கள். பதி - இருக்கும் ஊர். வீழி - திருவீழிமிழலை; சோழநாட்டுத் தலம். மிழலை என்பது ஊர்ப்பெயர். வீழி என்னும் கொடியைத் தலவிருட்சமாக உடைமையால் வீழி மிழலையாயிற்று, வீழியென்று சுருங்கச் சொன்னார் ; நாமைகதேசம். உண்டி-உணவு. பட்டினியில், நோயில் என்று தனித்தனியே பிரித்துச் சொல்வது சிறப்பு. குறிக் கொண்மின் நினைவு வைத்துக்கொளளுங்கள. இது குறிப்பாக அருள் செய்யவேண்டும் என்ற கருத்தைப் கருத்தைப் புலப் கின்று, படுத்தியது.) இது, 95-ஆம் பதிகத்தின் ஆறாவது திருப் பாட்டு.
பக்கம்:இரவும் பகலும்.pdf/93
Appearance